எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வெள்ளி செய்வாய்களில் கோவில் எங்கும் கூட்டம்.. சிலைகளுக்கு அன்று...

வெள்ளி செய்வாய்களில்
கோவில் எங்கும் கூட்டம்..
சிலைகளுக்கு அன்று 
பாலில் தான் அபிசேகம்..

சாப்பிட என் தேசத்து
பிள்ளைகளுக்குச்
சோறென்பது இங்கு இல்லை
உங்கள் பஞ்ச மாதவுக்கு
பாலபிசேகம்
என்ன தான் கொள்ளை..

வெள்ளி மதியம் எங்கும்
மசுதிகளில் ஒரு சேர தொழுகை
உங்கள் பிரார்தனைகளில்
நாடு வளம் பெற்றதா இல்லவே இல்லை

ஞாயிறு ஆனால் போதும்
சர்ச்சுக்களில் எல்லாம்
அருள் போதனை கூட்டம்

உங்கள் ஏசு நாதர் வந்து
உங்களுக்குத் தான் 
இட ஒதுக்கீடு வாங்கித் தந்தாரா
உண்மையை சொல்ல எவருமில்லை..

மதங்களை  தூரத்தில் வைப்போம்
மனிதர்களில் ஒரு கருணையை 
வெளிப்படுத்திக் காட்டிடுவோம்..

காசை காகிதமாய் பார்ப்போம்
கல்வியை அனைவருக்கும்
இலவசமாய் கொடுத்திட
ஒன்று சேர்ந்து எதிர்த்துப் போராடுவோம்

செத்தால் வீசும் உடலென்று உணருவோம்
சாகாமல் உயிர் காக்க
மருத்துவமனை 
மலிவு விலையில் செய்து கொடுப்போம்

இருக்கும் வரை 
மனிதனை மனிதன் மதித்திடுவோம்..
நம் இறந்து போனால்
மதங்கடந்து அனைவரும்
அனுதாபபட நல்வாழ்வு வாழ்ந்திடுவோம்

முகனோ அல்லாவோ ஏசுவோ
இதைச் செய்யாமல் நீ செத்துப் போனால்
உன்னை நரகத்துக்கே போகச் சொல்வார்
.

பதிவு : Barathi senthil
நாள் : 2-Mar-18, 1:19 am

மேலே