எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விவசாயி உழுதவன் கண்களில் கண்ணீர் மறித்து உதிரம் வடிகிறது...!!!...

விவசாயி

உழுதவன் கண்களில்
கண்ணீர் மறித்து
உதிரம் வடிகிறது...!!!

ஏர் கொண்டவன் 
கரங்கள் இன்று....
கார் வேண்டுமெனக் 
கையேந்தி நிற்கிறது...!!!

நிழல் தந்த 
நிஜங்கள் இன்று....
கனவாய்க்கூடக் கானவில்லை...!!!

சுட்டெரிக்கும் சூரியன்
உழவனின் உதிரத்தையும்
உறிஞ்சித் தன்தாகம் தீர்க்கிறது...!!!

உழைப்பை நம்பியவன் 
உயிர் விட்டுத் 
தொலைந்து போனான்...!!!

உறவை நம்பியவன்
உரிமையிழந்து
உடைந்து போனான்...!!!

அன்னாந்து பார்த்தே....
கழுத்தூனமாகி 
 நாவறண்டு நாதியற்றுப் போனான்...!!!

பணம் வேண்டுமெனப்
படுத்துருண்ட ,பாடித்திரிந்த
பாழடைந்த காட்டைக் கூறு போட்டு விற்றான்...!!!

கடைசியில் இழக்க ஏதுமின்றி
கல்லறைக் காட்டில் தன் கரம் 
கொண்டே தன்குழி 
தோண்டித் துயருற்றான்...!!!

வயல் வறண்டு, விளைநிலம் வறண்டு,  தான் வறண்டு, தன்மக்கள் வறண்டு
தரிசாகிப் போனான்...!!!
தமிழ்நாட்டு விவசாயி...!!!


-விவசாயி மகள் மேனகா

பதிவு : Menakadevi k
நாள் : 9-Apr-18, 9:11 pm

மேலே