எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

19-04-2018 சங்கப் பலகையில்[FB] எழுதியது கட்டுடல் மேனி கொண்டாள்,...

 19-04-2018   சங்கப் பலகையில்[FB] எழுதியது 


கட்டுடல் மேனி கொண்டாள், கண்முனே வந்து நிற்க  
மொட்டுடல் தழுவ எண்ணி மோகமே உந்தித் தள்ளக் 
கட்டியே அணைக்கச் சென்றான் கவிழ்ந்தவள் மூச்சுப் பட்டுக்  
கொட்டிய பாலாய் நின்றான் கூசினான் வருந்தி நின்றான்! ==  

பூப்போல் நுழைந்தான் புதுக்கதி ரோனுமென்  
பூப்போல் சிவந்தது வானுமே! – பூப்போல
வாடினேன் கண்டும் வருந்தினேன் தோள்சாயக் 
கூடிடாப் பூப்போல் குவிந்து!  

’உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர்’எனத்  
தெள்ளிதின் குறுந்தொகை தெரியப் படுத்தும்; 
வெள்ளமும் குறைத்து விடுமணல் அறுத்தும்  
மக்களுக் கென்றிவர் மறைத்திடு திட்டம் 
இக்கணம் நமது மக்களும் உணர்ந்து 
தக்க பதிலாய் முக்கியத் தேர்தலில் 
உளரெனப் படாஅ தொழிப்பரோ இவரை 
வளமது நாட்டினில் வாய்த்திடப் போமே!     

 15-04-2018 

 கட்டுடல் பற்றிக் கண்கள் தடுமாறும் 
விட்டுடல் ஆவி வேற்றுலகம் எத்திவிடும்  
பட்டுடல் தழுவப் பற்களுக்கும் ஆசைவரத் 
தட்டியவோ அதுவே தடயமாய் நின்றதுவோ  
வெட்கமுடன் பின்னதனை விரல்கள் தொட்டிடுமோ உள்ளமுமே துவண்டிடுமோ சொல்தோழி! 
 ====  === 

கடித்த வாய்ச்சுவடு கன்னியவள் தான்மறைக்க  
எடுத்த முயற்சிகளை இயல்பாய்த் தாய்கடிந்தாள்! 
மடித்த உதட்டோடு மனமும் 
நொடித்தகதை இச்சிறுவன் நுவல்வானோ சிரிப்பினிலே! 

 =====   =======       

நாள் : 23-Apr-18, 7:18 pm

மேலே