எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நூல் இழையாய் நொந்து போன நூல் அஞ்சல்கள் !!...

நூல் இழையாய் நொந்து போன நூல் அஞ்சல்கள் !!


அன்று..

அட்டை குளம் அருகேதான் தபால் அலுவலகம் 
தட்டி கூப்பிட்டால் கூப்பிடு தூரத்தில் வீடு
கெட்டிக்கார நண்பன்  கல்யாணம் 
எட்டி எட்டி பார்த்து ஏங்கி நின்றது மனம்  
 
அழைப்பிதழ் இன்றி போக மறுத்தது மனம் 
நண்பன் பிறிதொரு முறையும் அனுப்பினார் 
எண்ணிரு நாட்கள் காத்திருப்பு, வந்தது இம்முறை 

ஏக்கங்கள்  இருப்பினும், ஹார்ட் பதிவில்
தொடு உணர்வும் ஆர்வமும் அதிகம்.

இன்று ... 

அட்டை இல்லை
சட்டை இல்லை
தலை (தபால்) இல்லை
அச்சு கோர்க்கும் ஆள் அம்பேல்
ஆப்பு அனைத்துக்கும் 
ஆப் செயலிகள் எலி வேகத்தில்  

அனைத்தும் சாப்ட் பதிவு 
அழைப்பிதழா தேடு ஆண்ட்ராய்டை ..
அட்டைகள் கண்டதென்னவோ மஞ்ச கடுதாசி 
ஆண்ட்ராய்டுக்கென்ன தெரியும்
நண்பர்களின்  உண்மை அன்பு பற்றி ..

::   கடையநல்லூரான்


பதிவு : KADAYANALLURAN
நாள் : 15-May-18, 8:20 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே