ராஜா ராம் மோகன் ராய் : இந்த தலைமுறை...
இந்த தலைமுறை மற்றும் வரப்போகும் தலைமுறைகள் ராஜாராம் மோகன்ராய் அவர்களை பற்றி தெரிந்து கொண்டே ஆக வேண்டிய சூழ்நிலை. மதங்களை துண்டாட நினைக்காமல், இருக்கும் மதங்களில் உள்ள அனைத்து நல்ல கருத்துகளையும் மதித்து, சமுதாய சீர்திருத்தங்களுக்கு ஒரு பிதாமகராக அன்றே தமது முழு வாழ்க்கையையும் அர்பணித்துக்கொண்ட மாமனிதர் ராஜாராம் மோகன்ராய்.
மே மாதம் 22ஆம் தேதி (1772)இல் பிறந்த இவர், வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்தவர். இவர் சாதனைகளில் சிலவற்றை பட்டியல் இடுவதில் எழுத்து எண்ணம் குழு பெருமை கொள்கிறது: 1. பிரம்ம சமாஜத்தை நிறுவியவர்
2. புதிய இந்தியாவை நிறுவியர்
3. புதிய மறுமலர்ச்சியை தொடங்கி வைத்தவர்
4. இந்து சமுதாயத்தில் இருந்த மூடநம்பிக்கைகளுக்கும் மற்றும் ஏனைய தீமைகளுக்கும் எதிராகக் குரல் எழுப்பியவர்
5. இந்துப் பெண்களுக்குக் கட்டாய வழக்கமாக இருந்த உடன்கட்டை ஏறல் (சதி) என்ற சமுதாயக் கொடுமையை ஒழிக்க பாடுபட்டவர்
6. வேதங்கள் மற்றும் ஐந்து முக்கிய உபநிடதங்களை வங்க மொழிக்கு மொழிபெயர்த்திருந்த அவர் அவற்றைக்கொண்டு சதி என்பதை உண்மையான இந்து மதம் ஆதரிக்கவில்லை என்று தீவிரமாக வாதாடி சதி தேவையில்லை என்று முழங்கியவர்
7. பன்மொழி வித்தகர்
8. ஹிந்து மத தர்ம சாஸ்திரங்கள், வேதங்கள், உபநிஷத்துக்ககள் ஆகியவற்றை கற்றறிந்த மாமேதை
9. வேதாந்த சாத்திரங்களின் சாரத்தை ஆங்கிலத்திலும், வங்காள மொழியிலும்வெளியிட்டார்
10. நான்கு உபநிடதங்களை மொழிபெயர்த்தார்
சீர்திருத்த செம்மல் ராஜாராம் மோகன் ராய் அவர்களின் பிறந்த தினமான இன்று கூகிள் நிறுவனமும் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமது நிறுவன இணைய தளத்தில் அவரது பட புதையலை வெளியிட்டு பெருமை கொள்கிறது.
:: கடையநல்லூரான்