எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சூர்ப்பனகை : ராமாயணக் கதைக்கு முக்கிய காரணமானவளே சூர்ப்பனகைதான்...

 சூர்ப்பனகை : 


 ராமாயணக் கதைக்கு முக்கிய காரணமானவளே சூர்ப்பனகைதான் என்பதை சொல்லவும் வேண்டுமோ ? இராமாயண மகா காவியத்தில்,  இலங்கை வேந்தனாக இருந்த  இராவணன்,மற்றும்   கும்பகர்ணன், விபீடணன், கரன், தூஷணன்  ஆகியோர் இவளது  சகோதரர்கள். ஆவார். இராமன், சீதை மற்றும் இலட்சுமணன் ஆகியோர் தண்டகாரண்யம் காட்டில் வன வாசம் மேற்கொண்டிருந்த பொது  சூர்ப்பனகை இராமன் மீது ஆசை கொண்டாள். ஆரண்ய காண்டத்தில், ராம லட்சுமணர்களை சூர்ப்பனகை காணும் காட்சி சுவையாக விவரிக்கப் படுகிறது.

“த³ஶரதா²த்மஜ யுக்³ம நிரீக்ஷண…”  என்று தொடங்கும் அப்பாடலில், சூர்ப்பனகை "ஒரு பசுவைப் போல இருந்தாள் என்கிறார் கவி. ஒரு ஆற்றுக்கு இரண்டு பக்கமும் நல்ல பசும்புல் இருக்க, திகைத்து உண்ணாமல் இங்கும் அங்கும் பசுவைப்போல, தசரதனின் புதல்வர்கள் இருவரின் அழகிலும் மயங்கி ளாம் சூர்ப்பனகை". இலக்குவன் அவளது மார்பகங்களையும், மூக்கையும், காதுகளையும் வெட்டித் துரத்திவிட்டான். இலக்குவன் இவ்வாறு செய்ததன்  காரணத்தை  அறியுமுன் சூர்ப்பனகையின் முற்பிறவியை அறிவோம்.

ராவண குலம் புலஸ்தியர் என்னும் ரிஷியிடம் துவங்குகிறது. புலஸ்தியரோ பிரம்மாவின் பிள்ளை. அப்படி பிரம்ம தேவனிடம் நேரடி சம்பந்தம் இருக்கும் நமக்கு இந்த கஷ்டம் வந்தது ஏன், எப்படி  என்று பிரம்மனையே நொந்து கொள்கிறாள் சூர்ப்பனகை. "லாவண்யாம்பு³னிதே⁴: அமுஷ்ய த³யிதாமேனாமிவைனம்...."  என்கின்ற பாடலில் பிரம்மன் எனது  குலத்தில் ஆதி முதல்வர். அப்படி இருந்தும் எனக்கு ஏன் இந்த சீதையைப் போல அழகு தரவில்லை? என்று மருகுகிறாள் சூர்ப்பனகை. அதே நேரம், ஆரண்யத்தில் ராம இலக்குவர்களை கண்ணுற்ற அவள்,  சந்திரனைப் போல ஒளியுடையவர்களாக படைத்தும் இந்த ராம இலக்குவர்களை காட்டில் வாழுமாறு ஏன் விதித்தார்? ஏன் இந்த கஷ்டம்  என்றும் அரட்டுகிறாள். 

சூர்ப்பனகை முற்பிறப்பில் ஆனந்த குரு என்பவருக்கு சுமுகி  என்கின்ற பெயரில்  மகளாகப் பிறந்தாள். அந்த  குருவிடம், சங்கசூடணன்(சத்தியவிரதன் என்ற மன்னனின் மகன்)   பாடம் படித்தான்.அவனை  ஒருதலைப்பட்சமாக சுமுகி காதலித்தாள். ஒருநாள் பாடத்தில் சந்தேகம் கேட்க குருவின் வீட்டுக்கு சங்கசூடணன்  சென்ற நேரம், குரு வீட்டில் இல்லை. சுமுகி தனித்திருந்தாள். தன் காதலை சங்கசூடணனிடம் வெளிப்படுத்தினாள். அதற்கு தன தங்கையாகவே அவளை அவன்  கருதுவதாகவும், குருத்ரோகம் பொல்லாதது என்றும் கூறி மறுத்து விட்டான். தந்தை வீட்டுக்கு வந்ததும் தன்னை சங்கசூடணன் கெடுத்து விட்டதாக பழி போட்டு விட்டாள் சுமுகி.  புகார் மன்னன்  வரை  சென்றது.  

அதை நம்பிய மன்னன்,  தன் மகனின் கை, கால்களை வெட்டிவிட்டான்."தர்மம் அழிந்து விட்டதோ?" என்று பூமியில் விழுந்த சங்கசூடணன்  கதறினான்.   பூமி பிளந்தது. உள்ளிருந்து ஆதிசேஷன் வெளிப்பட்டு, " இப்பிறப்பில் உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய சுமுகியை மறுபிறப்பில் பழிவாங்குவேன்,'' என்றான். விபீஷணனாக  சங்கசூடணனும்,  அவனது தங்கையாக சுமுகியும் மறுபிறப்பில் பிறந்தனர்.  அவளே சூர்ப்பனகை எனப் பெயர்பெற்றாள். ஆதிசேஷன் லட்சுமணனாகப் பிறந்து சூர்ப்பனகையின் மூக்கை அறுத்து துரத்தினான். கோபமுற்ற  சூர்ப்பனகை தனது அண்ணன் இராவணனிடம் முறையிட்டாள். அவள் தான், சீதையின் அழகு பற்றி தன் அண்ணன் ராவணனிடம் கூறி உசுப்பேற்றியவள். தனது தங்கைக்கு நேர்ந்த நிலையையிட்டுச் சினம் கொண்ட இராவணன், இராமனைப் பழிவாங்க எண்ணிச் சீதையைக் கவர்ந்து கொண்டு வந்து இலங்கையின், அசோகவனத்தில் சிறை வைத்தான்.

பொதுவாக சூர்ப்பனகை அழகில்லாத பெண்ணாகவே கம்பராமாயணத்தில் சித்தரிக்கப்படுகிறாள்.   கம்பராமாயணத்தில், காதுகளையும், மூக்கையும், மார்பகங்களையும்  அரியும் லட்சுமணன், மூல கதையான வால்மீகியின் காவியத்தில், காதுகளையும், மூக்கையும் மட்டுமே அரிகிறான்.  

:;  கடையநல்லூரான்      

பதிவு : KADAYANALLURAN
நாள் : 25-May-18, 4:28 pm

மேலே