எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

💔💘தேவதையின் மாயங்கள்💘💔 வானிலவும் உன்னை கண்டு காணிலவாய் பொளர்ணமியில்...

💔💘தேவதையின் மாயங்கள்💘💔

வானிலவும் உன்னை கண்டு
காணிலவாய்  பொளர்ணமியில்
விண்ணில் ஒழிந்த மாயமென்ன?💓

புல்லில் விழுந்த பனி மொட்டுக்கள்
விரிந்த உன் நெற்றியில் பொட்டாக
வருந்தி துடித்த மாயமென்ன?💗

அலை கடல் அசையாமல் உன்
தலை கூந்தல் அசையும் இசை
வலையில் விழுந்த மாயமென்ன?💓

மலர்ந்த பூக்களும் நொடிபொழுதும் உன்
புலர்ந்த விழி இமைக்கும்பொழுதில்
உதிர்ந்து உதித்த மாயமென்ன?💗

கட்டான பொன்னும் உலையில்
சிட்டான உன் புன்னகை கலையில்
பட்டென உருகிய மாயமென்ன?💓

வண்ணத்து பூச்சி ஏதோ பறக்கும்
எண்ணத்தில் உன் தேன் சிந்தும் இதழ்
கிண்ணத்தை வட்டமிட்ட மாயமேதோ! 💘💔

                             💔R💘B💔

பதிவு : ரமேஷ் RB
நாள் : 28-May-18, 5:56 pm

மேலே