💘உயிர் வாங்கும் காதல்💘 நடை பயணமாய் உன்னைதேடி இடை...
💘உயிர் வாங்கும் காதல்💘
நடை பயணமாய் உன்னைதேடி
இடை இன்றி உன்னில் கலந்து
தடை தாண்டி காதல் உரைத்து
படை சொல்லால் மனதை
உடை த்தாயே! - பாதி உயிரை
நடை பிணமாய் அலைத்து
உன் இதயக் கூட்டில் ஏனோ!
அடை த்தாயே !💗
கண்ணீர் வடிக்கும்
கண்களுக்கு தெரிந்த
காதலின் வலி
கண்மணி உனக்கு
தெரியாமல் போனதேனோ!💗
தூங்கும் இரவுகள் தொலைந்ததே
ஏங்கும் உணர்வுகள் தொடர்ந்ததே
தாங்கும் கனவுகள் தகர்ந்ததே
சங்காய் தினமும் என்னில்
தேங்கும் உன் நினைவுகள்
வாங்குமோ! என் மீதி உயிரையும்💘💔
💔R💘B💔