மனித நேயத்திற்கும் ஆயுதத்திற்கும் இடையிலான தூரத்தை உலக வரலாறு...
மனித நேயத்திற்கும் ஆயுதத்திற்கும் இடையிலான தூரத்தை உலக வரலாறு அலசி ஆராய்வதற்கு ஏதுவாக ஏகாதிபத்தியத்தின் கைப்பாவை வாய் திறந்திருக்கிறது.
ஆக, அப்பாவி மக்களின் உயிரை வைத்து மீண்டும் நாறிப்போன அரசியலை தூசு தட்டக் காத்திருந்த அனைத்துத் தரப்பினருக்கும் பெரும் பயன் கிடைத்திருக்கிறது.
அரசு தம் பொறுப்பற்ற அத்து மீறல்களை ஒத்துக் கொள்ளவும் வேண்டும்,
தலைமை செய்த தவறை ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். இதுவே மனித நேயர்களின் விருப்பமாக இருப்பினும், இது இரண்டும் நடந்தால் யார் குற்றவாளி என்று யார் தீர்மானிப்பார்கள்? எனவே, இரண்டுமே நடக்கப்போவதில்லை.
ஆயுதமேந்திய காட்டு மிராண்டிகள் அனைவரும் ஒரே வகையினர் என்பதையாவது வரலாறு மீண்டும் நிலை நிறுத்திக்காட்டியிருப்பது குறித்து எச்சரிக்கையடைந்து கொள்வோம். !!!
இந்த உண்மை அனைவருக்கும் தெரியும், உண்மையான போராளிகள் அதுவும் மக்களுக்காகப் போராடும் போராளிகளாக இருந்திருந்தால் முதலில் தாம் உயிர் நீத்தாலும், அந்த மக்களை வாழ வைக்க வழி செய்திருக்க வேண்டும், ஆனால் இங்கு அது மாறித்தான் நடந்தது. தலைவர்கள் தம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளவும், பொது மக்கள் அரணைக் கடந்து வர அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பதன் மூலம் அழுத்தங்களைப் பிரயோகித்து , அடங்கிப் பின் வேறு வழிகளில் வீராவேசம் பேசவும் போட்ட திட்டத்திற்கு மக்கள் தலையில் கட்டி விட்டுத் தப்பி விடலாம் என்று திட்டமிட்டு விட்டார்கள்.
இறைவா தமிழர்களை காப்பாற்றுவாயாக !!1