எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழ் வளர்த்த சான்றோர் : தமிழுக்கு இதய மாளிகை...

 தமிழ் வளர்த்த சான்றோர் :


தமிழுக்கு இதய  மாளிகை  கண்ட மளிகை முதலாளி : வேதாந்தி திரு.வடிவேலு செட்டியார் 

1863 இல் சென்னை கோமளீஸ்வரன் பேட்டையில் மளிகை கடை வைத்திருந்த சுப்பாராய செட்டியாருக்கு திருமகனாக திரு அவதாரம் எடுத்தார் வடிவேலு செட்டியார் . அப்போதைய வழக்கம் போல் திண்ணை கல்வியே தொடக்க கல்வி .  தந்தையாருடன் மளிகைக்கடை கவனிப்பு,  கடைக்கு வரும் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமானுஜ நாய்க்கர் மூலம் தமிழ் பாடல்களில், இலக்கியத்தில் ஈர்ப்பு என்று -  இவரது தமிழ் ஆர்வம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்  மலர்ந்தது.  

பொருட்களின்கொள்முதலுக்குச்செல்லும்போதுசிவப்புநிறவே கொள்முதலுக்குப் போகும்போது கட்டிக்கொள்வதோ சிவப்பு வண்ண வேஷ்டி. உறவினர்களும் இவர் வியாபார நிமித்தமாகத்தான் செல்கிறார் என்று ஆனந்தித்தனர். கொள்முதலுக்கு எடுத்துச் செல்லும் சாக்குப்பையில் வெள்ளை வேட்டியையும் தேவையான புத்தகங்களையும் மறைத்து எடுத்துச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.  கூவம் ஆற்றைக் கடந்தவுடன் வெள்ளை வேட்டியை உடுத்திக்கொண்டு, பெரும் புலவர்களிடம் பாடம் கேட்கச் சென்று விடுவார். பொருட்களைக் கொள்முதல்  செய்த பின் இல்லம் திரும்பி விடுவார். 


தமிழ்க் கல்வியின் மீதான இவரது ஆர்வம், படிப்படியாக வணிகத்தின் மீதானவிருப்பத்தைக்குறைக்கத்தொடங்கியது. அவருக்கு உறவுகளும், வியாபாரமும் பெரும் தொல்லையாக தீராத துன்பத்தையும் தந்தன.   இந்நேரத்தில் ரிப்பன் பிரின்டிங் பிரஸ் உரிமையாளரான திரு சை. இரத்தின செட்டியார் அவர்களின் தொடர்பு வடிவேலு செட்டியார் அவர்களுக்கு வேதாந்தம் பயிற்றுவித்து குருவாக விளங்கும் அளவுக்கு உயர்ந்தது.  வடிவேலு செட்டியார் கல்விக்கு இடையூறு வரக்கூடாது என்கின்ற முயற்சியில், தலைமை தமிழ் ஆசிரியர் பதவியை தங்க    சாலை  தெரு பள்ளி ஒன்றில் வாங்கி கொடுத்த நிகழ்வு, செட்டியாரின்  வாழ்க்கைபாதையையே முற்றிலும் மாற்றி அமைத்து விட்டது..

பள்ளியில் மாணவர்களுக்குப் பாடம் நடத்துவது தவிர மற்ற நேரங்களில் தன்னை நாடி வருகின்ற தமிழ் ஆர்வலர்களுக்குத் தமிழும், தத்துவமும் போதித்துவந்தார் செட்டியார் அவர்கள்.  அத்தகையவர்களுள், தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், மொ. அ. துரைஅரங்கனார், மு. வரதராசனார் போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். 

அத்வைத வேதாந்தம், மற்றும்  தமிழ் இலக்கண, இலக்கியங்களிலும், தர்க்கத்திலும் பெரும்புலமை பெற்ற மாபெரும் தமிழறிஞர்.   நாநாசீவவாதக் கட்டளை, சிவப்பிரகாசப் பெருந்திரட்டு,  திருக்குறள் மணக்குடவர் உரையுடன்,கைவல்ய நவநீதம்,ஸ்ரீபகவத்கீதை, உபநிடதம்,கந்தர் கலிவெண்பா,மெய்ஞ்ஞானபோதம் ஆகியவை செட்டியார் அவர்கள் எழுதி, பதிப்பித்த நூல்களில் சில.

இவற்றில் சர்வதர்சன சங்கிரகம் நூலை குறித்து சில வரிகள்: இந்தியத் தத்துவத்தைப் பற்றிய நூல்கள் எழுதியுள்ள அறிஞர்கள் அனைவரும் தவறாது குறிப்பிடுகின்ற நூல் "சர்வதரிசனசங்கிரகம்". நமது தத்துவ தரிசனங்களை பதினாறு தலைப்புக்களில் பகுத்து விளக்கியுள்ளார்.  இந்த வடமொழி நூலை இராமச்சந்திர சாத்திரியார் என்பவரைக்கொண்டு மொழிபெயர்த்து நல்ல முன்னுரையுடனும் குறிப்பிடத்தக்க குறிப்புகளுடனும் 1910 இல் வெளியிட்டார்.  வேதத்துக்கு உரைவகுத்த சாயனருடன் பிறந்த ”வித்யாரண்யர்” இந்நூலின்ஆசிரியர்ஆவார்.  

திருக்குறளுக்கு உரை எழுதிய  பரிமேலழகர் உரையிலுள்ள இலக்கண நுட்பங்களையும் தத்துவக் குறிப்புகளையும் தெளிவாக விளக்கி இவரால் எழுதப்பட்ட குறிப்புகள்,  அறிஞர்களால் பாராட்டப்படுகின்றன. இந்தத் திருக்குறள் நூலில் எல்லா குறள்களுக்கும் ஆங்கிலமொழி பெயர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இவரது நண்பர் ஒருவர் இந்த மொழி பெயர்ப்பைச் செய்து கொடுத்து தன் பெயரை வெளியிட வேண்டாம் என்று சொன்னதாகச் செட்டியார் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். 

:: கடையநல்லூரான்                                

பதிவு : KADAYANALLURAN
நாள் : 6-Jun-18, 8:44 pm

மேலே