தேசத்தின் பன்முக தன்மையை மதிக்க வேண்டும்.. ஆர்எஸ்எஸ் விழாவில்...
தேசத்தின் பன்முக தன்மையை மதிக்க வேண்டும்.. ஆர்எஸ்எஸ் விழாவில் பிரணாப் முகர்ஜி பேச்சு
அதில், நாட்டின் பன்முகத்தன்மையை நாம் கொண்டாட வேண்டும்.சிலரை மட்டும் தனிமைப்படுத்திவிட்டு பன்முகத்தன்மையை பார்க்க முடியாது.சகிப்புத்தன்மை இல்லாதது தேசியவாதத்தை சீர்குலைக்கும்.
நம் நாட்டில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், கிருஸ்துவர்கள் சமமாக மதிக்கப்படவேண்டும். நேருவின் கனவு அதுதான். எல்லா மதத்தினருக்கும் சரியாக வாய்ப்பளிக்க வேண்டும். நேரு இதற்காக உழைத்தார்.
தேசியவாதமும், தேசபக்தியும் ஒன்றோடொன்று பின்னப்பட்டவை. எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் பேசி தீர்க்க வேண்டும். மத கலவரங்களை நிறுத்த வேண்டும் . இந்திய தேசிய மக்களை சிதைக்கு வகையில் தீவிரமாக இருக்காது என்று அண்ணல் காந்தி கூறியுள்ளார். நாம் அப்படித்தான் நடக்க வேண்டும் . மதங்களையும். மொழிகளையும் வைத்து மக்களை பிரிக்க கூடாது.
இந்தியா முழுக்க மக்கள் வேறு வேறு மொழிகள் பேசுகிறார்கள். பல மக்கள் பல மொழிகளை பேசுகிறார்கள். எல்லா மொழிகளையும் அரசு மதிக்க வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.
ஷியாம்சுந்தர்
Read more at: https://tamil.oneindia.com/news/india/pranab-mukherjee-rss-meet-visits-its-founder-kb-hedgewar-321871.html