நெருங்கிய உன்னை விலகி நிற்க சொன்னேன் ஆனால் நெருங்கவே...
நெருங்கிய உன்னை விலகி நிற்க சொன்னேன் ஆனால் நெருங்கவே கூடாதென சொல்லவில்லை....
என் நினைவு எங்கிலும் நீயே நிற்க உன் பிம்பத்தை காண ஏங்கினேன்...
நொடி பொழுது பிரியா வரம் கேட்டேன், ஏனினும் என் கனவிற்கு மட்டுமே ஏற்புடையது என்று உணர்த்திவிட்டாயே.....
என் குரலை கேட்க நீ காத்திருந்த காலங்கள் போக உன் அலைபேசியின் அழைப்பிற்காக கடிகாரத்தில் நிமிடத்தை நகர்திய நாட்கள் பல....
காட்சிக்கு உரிய ஓவியம் நீ மட்டுமே என்பதால் விலகி சென்றாலும் விரும்பி ஏற்கிறேன்...
ஆயிரம் ஆசையுடன் கரை சேர ஏங்கும் படகாய் கண்ணீரீல் தத்தலிக்கிறேன்.....