எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மூன்று எழுத்தின் உன்னதம்....... கரை இல்லா அன்பிற்கு உரியவள்.........

மூன்று எழுத்தின் உன்னதம்.......
கரை இல்லா அன்பிற்கு உரியவள்......
காற்றில்லா இடத்திலும் காத்தவள்.....
விழி தூங்க விழித்திருந்தவள்...
தவழும் போதும் தவறி விழ கூடாதென தவழ்ந்தவள்.....
நடையின் நலினத்தை ஊரார்க்கு காட்டி மகிழ்ந்தவள்.....
மழலை பேச்சை செவிகளில் கேட்க தவம் இருந்தவள்....
எண்ணி எண்ணி சொல்ல வார்த்தைகள் ஆயிரம் இல்லை....
உன் அன்பை போற்ற மொழியில் வார்த்தைகள் இல்லை.....
மூன்று எழுதின் உருவே....உன்னதத்தின் உட்சமே அம்மா.......

பதிவு : Rajapriya
நாள் : 24-Jul-18, 9:31 pm

மேலே