எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சரித்திரம் படைத்த குணச்சித்திர நடிகை மீனா குமாரி பிரபல...

சரித்திரம் படைத்த குணச்சித்திர நடிகை மீனா குமாரி 


 பிரபல ஹிந்தி நடிகை  மீனா குமாரியின் எண்பத்து  ஐந்தாவது பிறந்த நாள் இன்று.. சுமார் தொண்ணூற்று இரண்டு  திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற  திரைப்பட உலகின் "ஐகானிக்" என்று சொல்லப்பட்ட இவர் சிறந்த கவிஞரும் கூட.  இவரது தந்தை  அலி பக்ஸ் நாடகக் கவிஞர்  மற்றும்  உருது மொழிப் புலவர்.  தமிழ் திரைப்பட உலகில் பிரபல நடிகைகள் சோகத்தை பிழியப்பிழிய நடித்து நடிப்பின் சிகரத்துக்கு சென்றார்களோ, அதே போல, மீனா குமாரி  சோகங்களின் அரசி என்றே(குயின் ஆப்  ட் ராஜேடீஸ் ) என்றே  அழைக்கப்பட்டவர்.

 இவரது  தாய் பெங்காலி என்பதால் இயற்கையான மென்மையான முகத்  தோற்றமும் இனிமையான குரலும் அவருக்கு பிளஸ் பாயின்ட்டாக அமைந்தன.   சிறுவயதிலேயே தனது மூன்று மகள்களையும் சினிமாவில் நடிக்கவைக்க முயற்சித்த அலி பப்ஸ் தமது  ஆறுவயது மகள் மஹா ஜாபீன் பானுவை (பிற்காலத்தில் மீனாகுமாரி என்கின்ற நாமகரணம் தரித்தவர்)  விஜய் பட்டிடம் அறிமுகப்படுத்த, , “லெதர் பேஸ்’ (1939) என்ற படத்தில் நடித்தார். பேபி மீனா என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.  பின்னர் “பைஜு பாவ்ரா’ (1952) படத்தில் மீனா குமாரி என்ற பெயரில் கதாநாயகியாக நடித்து, தமது நட்சத் திர அந்தஸ்த்தை உயர்த்திக்கொண்டார். .   ஹோமிவாடியாவின் “அலா வுதீனும் அற்புத விளக்கும்’ (1952) படத்திற்கு, ஊதியமாக 10 ஆயிரம் ரூபாய் பெற்றார். 1953 இல் வெளிவந்த பரினீதா மூலம்,   மீனாகுமாரி அடுத்த மைல் கல்லை தொட்டார்.   “புட்பாத்’ (1953) படம்  வர்த்தக ரீதியில் தோல்வி  கண்டாலும்,  தனிப்பட்ட முறையிலும் தொழில்ரீதியாகவும் நடிகை என்ற அந்தஸ்த்தை உயர்த்தவே செய்தது. 

பதினெட்டு வயதான  மீனாகுமாரியை விட கமல் அம்ரோஹி பதினைந்து  வயது மூத்தவர். ஏற்கெனவே திருமணமானவர். இருவருக்குமி டையே மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்தாலும் இரண்டா ண்டுகள் தங்கள் திருமணத்தை இருவருமே ரகசியமாக வைக்க வேண்டிய தாயிற்று..திலீப்குமாருடன் “ஆசாத்’ (1955), புது முகமாக அறிமுகமான சுனில் தத்துடன் “ஏக் கி ராஸ்தா’ (1956), ராஜ்கபூருடன் “சாரதா’ (1957) போன்ற படங்கள்  மீனாகுமாரியின் திறமையை மேலும் மெருகேற்றின.   சோகப்பாத்திரங்களிலும் தாம் சோபிக்க முடியும் என்பதை நூறு சதவிகிதம் நிரூபித்த படம்:   1960 இல் திலீப்குமா ருடன் நடித்த “கோஹினூர்’ 

“சோட்டி பஹூ’, “அப்ரர் அல்லி’ குருதத்தின் “சாஹேப் பீபீ அவுர் குலாம்’ “ஸ்லேவே’ ஆகிய படங்  களில் மீனாகுமாரியின் வித்தியா சமான நடிப்பை காணமுடிந்தது. அதேநேரத்தில் “சோட்டி பஹூ’ படத்தின் கதாபாத்திரம் போலவே அவரது வாழ்க்கையும் திசை மாறியது.   அமைதியான நதி என சென்று கொண்டிருந்த இவரது வாழ்விலும் புயல் மையம் கொண்டது. 1964-ஆம் ஆண்டில் கமல் அம்ரோஹியிடமிருந்து இவர் பிரிய நேர்ந்தது ஒரு சோக விஷயம். பிரிந்தபின்னர்,  புதுமுகமாக அறி முகமான தர்மேந்திராவுடன் “பூல் அவுர் பத்தர்’ (1966) படத்தில் நடிக்கும்போது தர்மேந்திராவுடன் காதல் மலர்ந்தது. இந்த உறவும் நெடுநாட்கள் நீடிக்கவில்லை. திரையுலகத்திற்காகத் தம்மை  அர்ப்பணித் துக் கொண்டாலும் தன் சொந்த வாழ்க்கை பிரச்னைகளிலிருந்து அவரால் மீள முடிய வில்லை.

இருப்பினும், நடிப்புத் திறமைக்காக பல விருதுகள் அவரைத் தேடி ஓடோடி வந்தன. தனிமை வாழ்க்கை மேற்கொண்ட அவர், தமது  மன வெளிப் பாடுகளை கவிதைகளாகவும் பாடல்களாக வும் புனைந்ததன் மூலம் ஒரு கவிஞரானார். புத்தக வடிவில் சில கவிதை கள் வெளியானபோது அவற்றில்  பெரும்பாலும் சோகத்தையே காண முடிந்தது. 1967-68 ஆண்டுகளில் திரையுலகம் கண்ட பல்வேறு மாற்றங்களுடன்,  இவரால் ஒத்துப்போக முடியாத சூழல் உருவானது. திறமையாளர்கள் பலரை ஒதுக்கி,  திறமையற்றவர்களுக்கு வாய்ப்பளி த்து வர்த்தகரீதியாக மாறிய திரை யுலகம் இவருக்குப் பிடிக்க வில்லை. இனி தம்மைப்போன்ற   சுய மரியாதை உள்ளவர்களுக்கு திரையுலகில் வாய்ப்பில்லை என்று  கருதி ஒதுங்கினார். 1972-ஆம் ஆண்டு மார்ச் மாதம் (நாற்பது வயதில்)  இயற்கை எய்தினார். இவர் ஒரு சிறந்த நடிகை மட்டுமின்றி மனித நேயம் மிக்கவராக திகழ்ந்தார். "மீனா குமாரி அவர்களின் கொள்ளை அழகும், இலக்கணம் மிகு நடிப்பும் எனக்கு என்றென்றும் இன்ஸ்பிரேஷன் , என்று நடிகை மாதுரி தீக்ஷித் சொல்வதுண்டு.  

இவரது திரையுலக இன்னிங்சில் சாதனைகள் பல ஆற்றி, ஹிந்தி திரைஉலகத்துக்கு இவர் ஆற்றிய அருந்தொண்டை கௌரவித்து , கூகிள் டூடுள் அவர்களது தளத்தில் இவரது படத்தை பதிவிட்டுள்ளது.      

:  கடையநல்லூரான்


Meena Kumari’s 85th birthday




 

பதிவு : KADAYANALLURAN
நாள் : 1-Aug-18, 8:11 pm

மேலே