எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அரசியல் உலகில் ஒப்பற்றதொரு ரோல் மாடல் அடல் பிஹாரி...

அரசியல் உலகில் ஒப்பற்றதொரு  ரோல் மாடல் அடல் பிஹாரி வாஜ்பாய் ....


விடுதலைக்கு முன், விடுதலைக்கு பின் என்ற இந்தியாவின் இரண்டு முகங்களையும்  கண்டிருந்த அனுபவசாலி வாஜ்பாய்.   காங்கிரஸ் அல்லாத கட்சியின  பிரதமர் ஒருவர் முதன் முறையாக இந்தியாவை ஐந்து  ஆண்டுகள் முழுமையாக ஆண்ட பெருமை உடையவர்.  இரண்டு முறை பிரதமராகப் பதவி ஏற்றுக் கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லாததால் பதவியை இழந்தாலும் மூன்றாம் முறை மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்று நிலையான ஒரு அரசை ஈந்தளித்து அளித்து மக்கள் மனதை கொள்ளை கொண்ட ஒப்பற்றதோர் மக்கள் தொடர்பாளர்.  

தேசிய நெடுஞ்சாலை முன்னேற்ற திட்டம்   என்ற பெயரில் உலகத்தரமான தேசிய நெடுஞ்சாலைகளை ஏற்படுத்த காரணமாக இருந்தவர்  வாஜ்பாய்.  திட்டத்தின் கீழ் சுமார்  49,260 கிலோமீட்டர் தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலைகள் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டன என்பதை இந்த தலைமுறையினரும் அறிந்து கொள்ளவேண்டிய தருணம் இது.

தமிழகம், தமிழக மக்கள் மீது தனி அன்பு கொண்டவர். பேரறிஞர் அண்ணாதுரை அவர்கள் மீதும் அவரது நாநயம்  மிகு பேச்சுமீதும் மிகுந்த மரியாதை கொண்டிருந்தார்.மதுரை விஜயத்தின் போது அரசாங்க பேருந்து ஒன்றில் ரொம்ப சாதாரணமாக ஏறி சென்று ரயில்வே நிலையம் சென்று தமது எளிமையை காட்டியவர். பாரதியார் போன்ற கவிஞர்களின் பாடல்களை மேற்கோள் காட்டி பல மேடைகளில் தேசிய சிந்தனையை வளர்த்தவர்.  பழங்குடி, சமூக நலன், சமூக நீதி போன்றவைக்கு மினிஸ்ட்ரி,  மற்றும் வடகிழக்கு பகுதிக்கு தனி துறை என்று பல புதிய விஷயங்களை புகுத்திய சீர்திருத்தவாதி. 

வாஜ்பாய் அவர்கள்  கொண்டு வந்த திட்டங்கள் தான் பாஜகவிற்கு முன்னெப்போதையும் விட  தேசிய அளவில் பெயரை வாங்கிக் கொடுத்து அக்கட்சியை மக்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.. இவரது  முடிவின் கீழ் தான் BALCO, HINDUSTAN ZINC, VSNL, போன்ற   நிறுவனங்களின் அரசு முதலீடுகள் குறைக்கப்பட்டது(divest).. ஜிடிபி நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டம், 2003 (FRBMA) என்பதன் கீழ் நிதிசார் ஒழுக்கத்தை நிறுவன மயமாக்கல், இந்தியாவின் நிதி பற்றாக்குறையைக் குறைத்தது. இதன் கீழ் தான் 2000-ம் ஆண்டு -0.8 சதவீதமாக இருந்த இந்தியாவின் ஜிடிபி 2005-ம் ஆண்டு 2.3 சதவீதமாக உயர்ந்ததற்கான அடிப்படைகக காரணமாகவும் அமைந்தது டெலிகாம் நிறுவனங்களை அரசு மட்டுமே நடத்த வேண்டும் என்பதில் இருந்து மாறுபட்டு,  வருவாய் பகிர்வுடன் தனியார் நிறுவனங்களுக்கு அளித்தது இவரது புகழ் மகுடத்தில் மேலும் ஒரு முத்து. இந்தியாவில் தொலை   தொடர்பு இன்று பாராட்டப்படும் அளவுக்கு வளர்ந்து இருக்கிறது என்றால் பெருமை வாஜ்பாய் அரசையே சாரும்.   புதிய தொலை தொடர்பு கொள்கை நாட்டி ன் தொலை தொடர்பு வளர்ச்சியை மூன்று சதவிகிதத்திலிருந்து  (1999) இருந்து எழுபது சதவிகிதத்திற்கு திற்கு(2012) உயர்த்தியது

2001-ம் ஆண்டு ஆறு முதல் பதினான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவசக்  கல்வியை அறிமுகம் செய்தார். சர்வ சிக்ஷா அபியான் என்ற  இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்த அடுத்த நான்கு வருடங்களில்  பள்ளி க்  குழந்தைகள்  இடைஇடையே கல்வியை விட்டு அகன்றது  60 சதவீதமாகக் குறைந்தது. 

கார்கில் போர்.  1999 அதனை தொடர்ந்து  2000ம் ஆண் டில்  இரண்டு பெரும் சூறாவளிக்  காற்று தாக்குதல், 2001ல் பெரும் பூகம்பம், பின்னர் கண்ட  எண்ணெய் நெருக்கடி, என பல தாக்குதல்கள் இருந்த போதும்,  இவை அனைத்தும் இந்தியாவின் ஜி.டி.பி'யில் சரிவு ஏற்படாமல் பார்த்துக் கொண்டார்.    பில் கிளிண்டன் இந்தியா விஜயம் மற்றும் சந்திப்பின் போது இந்தியா - அமெரிக்கா மத்தியிலான உறவு மேலும் வலுவடைய வழி வகை செய்தார்.  டெல்லி - லாகூர் இடையே முதல் மக்கள் போக்குவரத்து துவக்கி முதல் ஆளாக பயணித்தது, பிராந்திய மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்வண்ணம்,  சீனாவுடன் வணிக கூட்டு, டெல்லியில் மெட்ரோ ரயில்  திட்டத்திற்கு  முதலில் ஒப்புதல் வழங்கிய பெருமை பாரத ரத்னா அடல் பெஹாரி வாஜ்பாய் அவர்களையே சாரும்.

சிறந்த கவிஞர்.  திறன்மிகு பேச்சாளர். அன்னாரது மறைவு, இந்திய ஜனநாயகத்தில் நிரப்பப்  முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டது என்பது உண்மை

.BHB Emote Tombstone Headstone Dead RIP
 உதாரண மனிதர் வாஜ்பாய் அவர்கள்.

||   கடையநல்லூரான்    

பதிவு : KADAYANALLURAN
நாள் : 17-Aug-18, 8:47 pm

மேலே