வல்லினம் சு வேணுகோபால் சிறப்பிதழ் இம்முறை சு.வேணுகோபால் மலேசியா...
வல்லினம் சு வேணுகோபால் சிறப்பிதழ்
இம்முறை சு.வேணுகோபால் மலேசியா வருவதை ஒட்டி அவருக்கான இதழ் ஒன்றை தயாரித்துள்ளோம். இணையத்தில் அவரது பெரும்பாலான ஆக்கங்கள் கிடைக்காத சூழலில் மலேசிய வாசகர்கள் ஓரளவு அவரது ஆளுமையை அறிய இவ்விதழ் உதவலாம். வல்லினத்துக்கு ஒரு புதிய சிறுகதை வழங்கியுள்ளார். நீங்கள் வாசிக்க வேண்டும்.
------------------------------
பதாகை – சு வேணுகோபால் சிறப்பிதழ்
பதாகை இவ்விதழ் சு வேணுகோபால் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. நண்பர் சுநீல் கிருஷ்ணன் இதழைத் தயாரித்திருக்கிறார். ஒரு படைப்பாளியை இப்படி பல கோணங்களில் முழுமையாக ஆராயும் கட்டுரைகளின் தொகுதி என்பது முக்கியமான ஒரு முயற்சி. இருவகைகளில் இது பயனுள்ளது. அப்படைப்பாளியை கூர்மையாகப்புரிந்துகொள்ள உதவுகிறது. அப்படைப்பாளியை சமகாலம் எப்படிப்புரிந்துகொண்டது என அறிய முடிகிறது
சு.வேணுகோபாலின் நீளமான பேட்டியை மட்டுமே வாசித்தேன். முக்கியமான ஆவணம் அது. எப்போதும்போல நேரடியாக தன் கருத்துக்களை முன்வைக்கிறார். ஒரு கலைஞனாக சமூகத்தின் வலிகளை இருள்களை நோக்கிச்செல்லும் அவரது பார்வையைக் காணமுடிகிறது
ஜெ