சமூக ஒற்றுமையை வளர்க்கும் கணேஷ் சதுர்த்தி போன்ற விழாக்கள்:...
சமூக ஒற்றுமையை வளர்க்கும் கணேஷ் சதுர்த்தி போன்ற விழாக்கள்: :
2018 ஆண்டுக்கான விநாயக சதுர்த்தி விழா எப்போதும்போலவே கோலாகலத்துடன் நிறைவடைந்தது. அன்று திலகர் (பாலா கங்காதரர் ) காலத்தில் சமூக அக்கறையுடன் போடப்பட்ட பிள்ளையார் சுழி விழா படிப்படியாக பெரிதளவில் கொண்டாடப்பட்டு இன்று உலக அளவில் முழுமுதற்கடவுளுக்கு பக்தி சிரத்தையுடனும் பரவசத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது கணேஷ் சதுர்த்தி .
பாரதத்தின் பற்பல மூலை முடுக்குகளில் பரந்தோங்கி விரிந்திருக்கும் காலனிகள் , தெருக்களில் விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்கள் கொண்டாடப்படும் நாட்களில்
1 . அது வரை அறிமுகம் இல்லாத / அறிமுகம் காட்ட மறந்த பலரும் ஒன்று கூடி கொண்டாடாடுவது ஒருவருக்கொருவர் புதிய அறிமுகம், அதனை தொடர்ந்து சமூக, கலாச்சார உறவுகளை வளர்த்து கொள்வது, சுக துக்கங்களை பகிர்ந்தளித்துக் கொள்வது போன்றவற்றிக்கு சாத்தியமாகிறது.
2. இது போன்ற விழா நாட்களில் சிறு சிறு பேட்டி கடைகள், பெரிய கடைகள், பூ விற்பவர்கள், மண், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற பொருட்களினால் பிள்ளையார் சிலை தயாரிப்போர், பழ வியாபாரிகள் ஆகிய பலதரப்பட்ட வியாபாரிகள் பலருக்கும் வியாபாரம் பெறுக வழி வகை செய்தாக ஆகிறது.
3 சிறார்கள் ஒன்றிணைந்து விழாவை கொண்டாடுவதால் குடும்ப உறவுகள் மேம்படுகிறது, பக்கத்து வீடுகள், தெருவில் உள்ள இதர வீடுகளில் வசிக்கும் பலருடன் நட்புறவு பெறுக அடித்தளம் போட வாய்ப்பு.
4 விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க செல்லும் நாட்களில், கடலில் கரைக்க உதவும் சிறுவர்கள் சிறிதளவாவது பணம் ஈட்டவும் , புகைப்படக்காரர்கள் போட்டோக்கள் எடுத்து அதன் மூலம் வருமானம் ஈட்டவும், ரொம்ப அபூர்வமாக அவருக்கு அணிவித்த மிக சிறிய தங்க தோடுகள் போன்றவற்றை விநாயகர் சிலை கரைக்குமிடத்தில் தர்மம் செய்யும் சிலர் மூலம் சிலர் உதவி பெறவும் தருணமாகவும் அமைகிறது இவ் விழா நடத்தல் அம்சங்கள்.
: கடையநல்லூரான்