எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாழ்க்கை துணை என் கையோடு உன் கை சேர்ந்தபோது...

வாழ்க்கை துணை

என் கையோடு 
உன் கை சேர்ந்தபோது
வளையல் சொன்னது
வாழ்க்கை துணையை
கொடுத்து விட்டேன்!

இவ்வுலகில் இருக்கும்
வரை
கை விட்டு விடாதே
கதறி விடுவாள்!

உனக்காக உறவுகளை
உதறிவிட்டு வந்தவள்
கண்ணில் இருந்து
கண்ணில் வராமல்
பார்த்துக்கொள்!

காலமெல்லாம் -உன்
காலடியில் இருப்பாள்
அன்பு துணைவியாக,

ஒரு துளியும்
துரோகம் 
செய்துவிடாதே!!
தன்னை மாய்த்து கொண்டாலும்
கொள்ளுவாள்!

இத்தனையும் அவள்
வாயால் சொல்ல 
தெரியாமல் 
அவள் அணிகலன்கள்
அணியும் போது 
என்னை அனுப்பி வைத்தாள்!!!!

பதிவு : Balamurugan
நாள் : 18-Sep-18, 12:23 am

மேலே