எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒற்றுமை ××××××××× ஓடையோரத்து ஒற்றைத் தென்னைமரம் ஒய்யாரம் காட்டுவதில்லை...

ஒற்றுமை 
×××××××××
ஓடையோரத்து 
ஒற்றைத் தென்னைமரம் 
ஒய்யாரம் காட்டுவதில்லை 
பரந்திருக்கும் 
பத்து தென்னைகளே 
பரவசமாக்குகின்றன

அகன்றிருக்கும் 
ஆலமரத்தைக் கூட 
அதைத் தாங்கியிருக்கும் 
ஆறு விழுதுகள்தான் 
அடையாளப்படுத்துகின்றன 
அடர்ந்திருக்கும் 
ஆயிரம் மரங்கள்தான் 
அடர் வனமென்று 
அழைக்கப்படுகின்றன 

அழகிய ஆடொன்று 
ஆரவாரம் செய்தால்
அடித்துச் சாப்பிடவே 
ஆட்களுக்கு 
ஆவல் பிறக்கும் 
ஆட்டுமந்தைகள் 
அணியாக நகர்ந்தால் 
அடைக்கப்பட்டப் பாதைகளும் 
அவைகளுக்காக 
அகன்றக் கதவைத் திறக்கும் 

உரிமைகளுக்காக உழலும் 
உணர்ச்சி உருவமே!
உலக உருண்டையை 
உள்ளங்கையில் ஏந்தும் 
உணர்வுக் கொண்டால் 
உன் உள்ளங்கையால் 
மட்டுமே 
உலக உருண்டை
உசும்பி விடாது 
உன்ணுணர்வுகளைக் கொண்ட 
உள்ளங்கைகளை 
உன்னோடு உரசிக்கொள் 
உலக உருண்டை 
உருண்டோடி வரும் 
உள்ளங்கைகளில் 
உசும்பி விளையாடும். 

ஆக்கியோன் :: வண்டப்புலி வைரமுத்து

பதிவு : Vandapuli127
நாள் : 23-Oct-18, 11:42 am

மேலே