சுமங்கலி ××××××××× மஞ்சள் முகமும் மல்லிகைக் கூந்தலும் மங்கையின்...
சுமங்கலி
×××××××××
மஞ்சள் முகமும்
மல்லிகைக் கூந்தலும்
மங்கையின் மங்கலங்கள்
மாலையிட்டவனை
மயங்க வைக்கும்
மந்திர மாத்திரைகள்
மனிதக் கணவனை
மன்மதனாக்கிடவே
மல்லிகையைச் சூடுகிறாள்
மயங்கியக் கணவனின்
மலரிதழ் சுவைத்திடவே
மஞ்சள் முகம் காட்டுகிறாள்
மயக்கத்தால் மலரவைத்தே
மடிந்திடாத மணவாழ்வின்
மணிவிழா மகுடத்தை
தன்
மன்மதனுக்கு சூட்டுகிறாள்
மடியப்போகும் வயதில் கூட
மஞ்சள் முகம் காட்டி
மல்லிகை மணமூட்டி
மல்லிகைச் சிரிப்புக் காட்டி
மணிவிழா அரங்கத்தின்
மகேச மனைவியாகிறாள்
மடிப்பு முகத்தில் பூசிய
மஞ்சளாலும்
மங்கியக் கூந்தலில் சூடிய
மல்லிகையாலும்
மகேசமாய் மலர்ந்து
மாநிலத்தையே மங்கலமாக்குகிறாள்.
ஆக்கியோன் :: வண்டப்புலி வைரமுத்து