எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ரசிகனே சுனாமி போல் வீசுபவன் விமர்சகன் தென்றலை போல்...

  ரசிகனே
  
 சுனாமி போல் வீசுபவன் விமர்சகன் 
தென்றலை போல் வீசுபவன் ரசிகன் 

அளிக்காத நீதிபதி அரியாசனத்தில் 
அவனாக அமர்ந்துகொள்பவன் விமர்சகன் 

அழியாத நினைவுகளை மனதுக்குள் சேர்த்து 
அழகாக எதையும் பார்ப்பவன் ரசிகன் 

ரசிப்பவனே 
எதிலும் அழகை மட்டும் பார்ப்பவனே 
வாடிய பூவிலும் வண்டு வரும் என்று 
எடுத்துக்காட்டு சொல்பவனே 

நிலவே இல்லா அம்மாவாசை இரவிலும் 
வானின் அழகை விழிகளால் அளப்பவனே 
குற்றம் புரிந்த உயிர்களிடம் கூட 
கல்லுக்குள் ஈரம் தேடுபவனே 

இசை கச்சேரியில் சுவரம் தவறி விட்டால் 
புது ராகம் பிறந்ததென்று புத்துணர்வாய் பேசுபவனே 
உணவிலே சிறிதளவு உப்பு குறைந்து விட்டால் 
"ரத்தம் சுத்தமாகும்" என்று சுவைத்து உண்பவனே 

ரசித்துக் கொண்டே இரு 
உன் ரசனையில் தான் இந்த உலகம் பிழைக்கிறது 
ரசிக்கும் உள்ளங்களுக்கு தான் உயிரினங்கள் உழைக்கிறது 

ரசித்துக் கொண்டே இரு 
உன் ரசனையில் தான் பூக்கள் அழகாய் தெரிகிறது 
அழகில் தான் கவிதைகள் பிறக்கிறது 

ரசித்துக் கொண்டே இரு 
ரசனையில் தான் மகிழ்ச்சி பிறக்கிறது 
ரசனைகள் தான் விமர்சனத்தை மறக்க செய்கிறது 

ரசித்துக் கொண்டே இரு ரசிகனே 
உனக்கு நான் முதல் ரசிகனே   

நாள் : 30-Oct-18, 10:22 pm

மேலே