இன்று மட்டுமல்ல என்றுமே இந்த மனித சமூகமும் அதன்...
இன்று மட்டுமல்ல என்றுமே இந்த மனித சமூகமும் அதன் உறுப்பினர்களான மனிதர்களும் முரடர்களாக்கவே வாழ்ந்து வந்துள்ளனர், வாழ்கின்றனர். அதனாலதான் என்னமோ ஒரு சிலர இந்த மனித சமூகத்தின் மீது அளவுக்கு அதிகமான வெறுப்பை உமிழ்கின்றனர். அவர்கள் ஒற்றைக் கண்களால்தான் இந்த உலகினை பார்க்கின்றனர் என்று எனது சொந்த கருத்து. அவர்களின் பார்வைப்படி இந்த மனித சமூகத்தில் ஆங்காங்கே கரடு முரடான குணம் கொண்ட மனிதர்கள் வால்வதேன்னமோ நிதர்சனம்தான்.
அந்த ஒரு சிலரை வைத்து ஒட்டு மொத்த மனித சமூகத்தின் மீதும் நம்பிக்கை இழப்பது அவ்வளவு ஆரோக்கியமானது அன்று. எந்த அளவுக்கு இந்த மனித சமூகத்தில் கொடூர கோர எண்ணம் கொண்டவர்கள் வாழ்கிறார்களோ அந்த அளவிற்கு மென்மையான மனிதர்கள் வாழ்கிறார்களா என்பதை நமது இரண்டு கண்களால் பார்த்தல் அதில் இருக்கும் நிதர்சனம் நமக்கு புலப்படலாம்.