எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கோடை காலத்தை சமாளிக்க டிப்ஸ் * கோடையை சமாளிக்க...

கோடை காலத்தை சமாளிக்க டிப்ஸ்
* கோடையை சமாளிக்க தினமும் 3 லிட்., தண்ணீர் குடிக்க வேண்டும்.
* நொறுக்கு தீனிக்கு பதில் வெள்ளரிப்பிஞ்சு, திராட்சை உட்பட பழங்களை சாப்பிடலாம்.
* பகல் நேரங்களில் இளநீர், மோர் குடிக்கலாம்.
* ஐஸ்கிரீம், குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது.
* பொரித்த உணவுகளை சாப்பிட வேண்டாம்.
* உடல் சூட்டை தணிக்க இளநீர், தண்ணீர் சத்து அதிகம் உள்ள காய், பழங்கள் அதிகமாக சாப்பிடலாம்.முக்கியமாக தர்பூஸ், தக்காளி, எலுமிச்சை ஜூஸ்கள் அதிகமாக குடிக்கலாம்.
*வாரம் இருமுறை ஆயில் பாத் எடுத்து கொள்ளலாம்.
*வெயிலில் போகு முன் சன்ஸ் கீரிம் லோஷன் அரை மணி நேரம் முன்பாக தடவி செல்லுங்கள்.
*கோடைகாலத்தில் மூன்றுவேளையும் வயிறு முட்ட சாப்பிடக்கூடாது.
*டிபன் 8 மணி, மதிய உணவு 12 மணி, மாலை சிற்றுண்டி 6 மணி, இரவு உணவு 8 மணிக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நாள் : 18-Apr-14, 12:02 pm

மேலே