தங்கமீன்கள், தலைமுறைகள், வல்லினம் படத்திற்கு தேசிய விருது பல்வேறு...
தங்கமீன்கள், தலைமுறைகள், வல்லினம் படத்திற்கு தேசிய விருது
பல்வேறு விருதுகளை பெற்ற தங்கமீன்கள் படத்திற்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேப்போல் மறைந்த ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான பாலுமகேந்திராவின் தலைமுறைகள், நகுல் நடித்த வல்லினம் படத்திற்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கமீன்களுக்கு 3 தேசிய விருது. சமீபத்தில் நடந்த கோவா சர்வதேச திரைப்பட விழாவில், திரையிடப்பட்ட ஒரே தமிழ்படமும் தங்கமீன்கள் தான்.
தமிழ் மொழி தவிர பிற மாநில படங்கள் மற்றும் கலைஞர்கள் பெற்ற தேசிய விருதுகள் விபரம்…
* சிறந்த நடிகர்
இந்தாண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருது இரண்டு பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஷாகித் என்ற இந்தி படத்தில் நடித்த ராஜ்குமார் ராவுக்கும், பெராரியாத்தவார் என்ற மலையாள படத்தில் நடித்த சூரஜ் வெஞ்சார்மூடுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
* சிறந்த நடிகை – கீதாஞ்சாலி தபா (லியார்ஸ் டைஸ் – இந்தி)
* சிறந்த படம் – ஷிப் ஆப் தீசஸ் (இந்தி)
* சிறந்த பொழுதுபோக்கு படம் – பாக் மில்கா பாக் (இந்தி)
* சிறந்த குழந்தைகள் படம் – கப்கால்
* சிறந்த இயக்குநர் – ஹன்சால் மேத்தா (படம் – ஷாகித் – இந்தி)
* சிறந்த துணை நடிகர் – சவுரப் சுக்லா (ஜாலி எல்எல்பி – இந்தி)
* சிறந்த துணை நடிகை – இரண்டு பேர் öபறுகின்றனர். அமிர்தா (அஸ்து – மராத்தி), அயிடா எல்காசெப் (ஷிப் ஆப் தீசஸ் – இந்தி)
* சிறந்த பின்னணி பாடகர் – ருபன்கார் பக்சி (ஜெயிதீஸ்வர் – பெங்காலி)
* சிறந்த பின்னணி பாடகி – பெல்லா ஷெண்டே (துயா தர்மா கொன்சா – மராத்தி)
* சிறந்த இசை (பாடல்கள்) – கபீர் சுமன் (ஜத்தீஸ்வர் – பெங்காலி)
* சிறந்த பின்னணி இசை – சாந்தனு மொய்திரா (நான் பங்காரு தல்லி – தெலுங்கு)
* சிறந்த ஸ்பெல் எபெக்ட்ஸ் – ஜல் (இந்தி)
* சிறந்த நடனம் – கணேஷ் ஆச்சார்யா (பாக் மில்கா பாக் – இந்தி)