எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாழ்க்கைப் பாடம் 21 ------------------------------------- ​நம் வாழ்க்கையில் அவ்வப்போது...

வாழ்க்கைப் பாடம் 21
-------------------------------------

​நம் வாழ்க்கையில் அவ்வப்போது கிடைக்கும் ​மகிழ்ச்சியையும் , அதேபோன்று எதிர்பாராமல் நிகழும் துன்பத்தையும் நம் மனதில் சேர்த்து வைப்பதைவிட மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதுதான் நல்லது . பொதுவாக இதெல்லாம் சேமித்து வைப்பதால் நமக்கு எந்தவித பயனும் கிடைக்கப் போவதில்லை, மாறாக பகிர்வதால் மனம் நிறைவடையும் என்பதை அனுபத்தில் உணர்ந்தவன் நான் . மேலும் வாழ்வில் ஏதும் நிரந்தரம் இல்லை என்பதால் பகிர்ந்துக் கொள்வதில் தவறில்லை .


 பலநேரங்களில் சேமிக்கும் செல்வத்திற்கே பாதுகாப்பு இல்லை இந்த காலத்தில் என்பதையும் நாம் கண்கூடாக காண்கிறோம் . நம்மால் மற்றவர்கள் பயன் பெறுகின்ற வகையில் தான் வாழ வேண்டும் என்பது எனது கொள்கை .

அவ்வாறே நம் வாழ்க்கையில் பலப்பல மாற்றங்களை சந்திக்க வேண்டியுள்ளது , தனிப்பட்ட முறையிலும் பொதுவாகவும் .அந்த நேரத்தில் அதை நினைத்து கவலைக் கொள்ளாமல் அதனை எப்படி எதிர்கொள்வது என்றும் அதனுடன் சேர்ந்து பயணிப்பது என்ற சிந்தனையும் வழிவகையும் பகுத்தறிந்து நமது சிந்தனையால் சீர் செய்துகொள்வதுதான் நமக்கு என்றும் சிறந்தது .அதுதான் உண்மையான மன நிறைவையும் அளிக்கும் என்பதை அனுபவத்தால் அறிந்தவன் என்ற முறையில் இதனை கூறிட கடமைப் பட்டிருக்கிறேன் .

இவை யாவும் வளரும் இளைய தலைமுறைக்கு மட்டுமன்றி அனைவருக்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன் . அதுவும் இந்த நவீன உலகத்தில் நமக்கு பகிர்ந்திட பலவழிகள் உள்ளன .அதிலும் இப்போது நமக்கு உதவிட அலைபேசி மற்றும் சமூக வலைத்தளங்கள் துணை நிற்கின்றன என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது என்றே நம்புகிறேன் . இதற்கு முகநூல் போன்ற தளங்களே சாட்சி.

என்றும் எவருக்கும் இன்பமே நிலைத்திடவாழ்த்துகள் !

பழனி குமார் 
09.01.2019

நாள் : 9-Jan-19, 2:14 pm

மேலே