எண்ணங்கள் - -------------- எப்பொழுதும் என்னுடனேயே இருக்கின்றாய் எங்கு...
எண்ணங்கள் -
--------------
எப்பொழுதும் என்னுடனேயே இருக்கின்றாய்
எங்கு நான் சென்றாலும்.
உறங்கும் போது கனவாக
உறங்கா போது நினைவாக!
நான் சோர்ந்து ஓய்வெடுத்தாலும்
நீ மட்டும் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கிறாய்!
என்னுள் இரண்டற கலந்தாய்
என் பலமும் பலவீனமும் நீ தானே!
கடந்து வந்த பாதைகளை
கட்டாயம் எடுத்து வருகிறாய்!
இவற்றிலிருந்து என்னை
இனிதாக விடுபடமுடியாமல் செய்கின்றாய்!
என்னுள்ளே ஓடும் இறையுணர்வை மட்டும்
என்னுள்ளேயே விட்டுவிட்டு
மற்ற பயனற்ற யாவற்றையும்
மறக்காமல் எடுத்துச் சென்றுவிடு!
என் வியப்பெல்லாம் ஒன்றே ஒன்றுதான்
என் முடிவுக்குப் பின் நீ எங்கிருப்பாய்!
Shantha Venkatakrishnan