எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன்னிடம் மணிக்கணக்கில் பேசி கலைத்த என் அலைபேசி இப்போது...

உன்னிடம் மணிக்கணக்கில் பேசி கலைத்த என் அலைபேசி இப்போது ஆவியரமற்று அனாதையாகி கிடப்பதை அறிந்திராத  தொலைதூரத்தில் உனை கொண்ட அந்த காலனை என்னால் என்ன செய்துவிட முடியும் காதலியே.....

இனி அந்த #மனைவி என்ற பெயர் தாங்கி வரும் அழைப்பை எப்போது காண்பேன்....அதை ஒருவித பொறாமை கலந்த தொணியல் புகழும் சுற்றத்தின் முகத்தையும் இனி காண்பேணோ....?🙁

நம் ஒட்டு மொத்த கனவும் கருகிக் கல்லறையில் கரைந்துப்போனதை எண்ணியபடியே 
நானோ துயருறுகிறேன்  
நீயோ மீளாத்துயில் கொள்கிறாய்.....

துயரம் தாங்காமல் துயில்கொள்ள துணிந்த உன் மேனி எப்படி தான் தாங்கியதோ உயிரை உரியும் உஷ்ணத்தை... ?
 
உன் கண்முன்னே ஒருகனமேனும் கசிந்திருக்ககூடாதா உன் கணவனனாகிய என் நினைவு...
கசிந்திருந்தால்,
கருகிபோயிருக்குமா நம் காதல்...
காதலை இழப்பதை விட பெருந்துயரம் காதலியை இழப்பது...கண்முன்னே இறப்பதை பார்ப்பது....
இந்த இரண்டையும் நீயே தந்துவிட்ட பிறகு
இதைவிட என்ன துயரம் எனை கொன்று செறித்துவிடும் ...போடி கிறுக்கி புலம்பவைத்து சென்றவளே !!!
இதை எழுத இரண்டு வாரம் கடந்த திறனற்ற பலவீனமானவனையா பரிதவிக்க விட்டு சென்றுவிட்டாய்....

நீ சென்ற உலகம் மதங்கள் புளுகும் சொர்க்கமோ நரகமோ எதும் அறியாத விரும்பதா நாத்திகனாக நான்....ஆனாலும் அங்கு உன்னுடன் நான் இல்லாத வெற்றிடம் உன்னை என்னபாடு படுத்துமோ என்ற பரிதவிப்பு மட்டுமே இப்போது...

இனியும் என்னத்த தொடர்ந்து எழுத 😳
எழுதிய எதையும் வாசிக்க நீ இல்லாத போது.....

பதிவு : சே குமார்
நாள் : 24-Jan-19, 11:45 am

அதிகமான கருத்துக்கள்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே