சே குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சே குமார்
இடம்:  திருநெல்வேலி
பிறந்த தேதி :  14-Jun-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Aug-2017
பார்த்தவர்கள்:  60
புள்ளி:  0

என்னைப் பற்றி...

எந்த இயக்கத்தின் கொள்கை வலைக்குள்ளும் சிக்குண்டு வாழாத சுதந்திர சுயமரியாதை பறவையாக பறக்கிறேன்.......
- *சே குமார்*...

என் படைப்புகள்
சே குமார் செய்திகள்
சே குமார் - எண்ணம் (public)
24-Jan-2019 11:45 am

உன்னிடம் மணிக்கணக்கில் பேசி கலைத்த என் அலைபேசி இப்போது ஆவியரமற்று அனாதையாகி கிடப்பதை அறிந்திராத  தொலைதூரத்தில் உனை கொண்ட அந்த காலனை என்னால் என்ன செய்துவிட முடியும் காதலியே.....

இனி அந்த #மனைவி என்ற பெயர் தாங்கி வரும் அழைப்பை எப்போது காண்பேன்....அதை ஒருவித பொறாமை கலந்த தொணியல் புகழும் சுற்றத்தின் முகத்தையும் இனி காண்பேணோ....?🙁

நம் ஒட்டு மொத்த கனவும் கருகிக் கல்லறையில் கரைந்துப்போனதை எண்ணியபடியே 
நானோ துயருறுகிறேன்  
நீயோ மீளாத்துயில் கொள்கிறாய்.....

துயரம் தாங்காமல் துயில்கொள்ள துணிந்த உன் மேனி எப்படி தான் தாங்கியதோ உயிரை உரியும் உஷ்ணத்தை... ?
 
உன் கண்முன்னே ஒருகனமேனும் கசிந்திருக்ககூடாதா உன் கணவனனாகிய என் நினைவு...
கசிந்திருந்தால்,
கருகிபோயிருக்குமா நம் காதல்...
காதலை இழப்பதை விட பெருந்துயரம் காதலியை இழப்பது...கண்முன்னே இறப்பதை பார்ப்பது....
இந்த இரண்டையும் நீயே தந்துவிட்ட பிறகு
இதைவிட என்ன துயரம் எனை கொன்று செறித்துவிடும் ...போடி கிறுக்கி புலம்பவைத்து சென்றவளே !!!
இதை எழுத இரண்டு வாரம் கடந்த திறனற்ற பலவீனமானவனையா பரிதவிக்க விட்டு சென்றுவிட்டாய்....

நீ சென்ற உலகம் மதங்கள் புளுகும் சொர்க்கமோ நரகமோ எதும் அறியாத விரும்பதா நாத்திகனாக நான்....ஆனாலும் அங்கு உன்னுடன் நான் இல்லாத வெற்றிடம் உன்னை என்னபாடு படுத்துமோ என்ற பரிதவிப்பு மட்டுமே இப்போது...

இனியும் என்னத்த தொடர்ந்து எழுத 😳
எழுதிய எதையும் வாசிக்க நீ இல்லாத போது.....

மேலும்

சே குமார் - எண்ணம் (public)
24-Jan-2019 11:44 am

வாழ்வில் எல்லாம் கடந்துப்போகும் 
சில #மரணங்களை தவிர.....


மேலும்

சே குமார் - எண்ணம் (public)
24-Jan-2019 11:44 am

நெருப்போடு கூட,
வாழ்ந்து விடலாம் போலிருக்கிறது...
ஆனால்,
உன் நினைவுகள்,
அதைக்காட்டிலும்,
அதிகமாய் சுடுகிறது.... !

மேலும்

சே குமார் - எண்ணம் (public)
24-Jan-2019 11:43 am

இந்தச் செவிட்டு கரைகளோடு
அந்த அலைகள் இத்தனை 
யுகங்களாய் அப்படி என்னதான்
பேசும் என்று யோசிக்கிறேன்...

-#வைரமுத்து...
#தண்ணீர்_தேசம்...

மேலும்

சே குமார் - கிநரேந்திரன் கருமலைத்தமிழாழன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jan-2015 10:45 am

சாதி ஒழி மதம் அழி (பொங்கல் கவிதைப் போட்டி 2015)
பாவலர் கருமலைத்தமிழாழன்

சாதிக்கப் பிறந்திட்ட தமிழா உன்றன்
சாதனைகள் சாதிகளா எண்ணிப் பார்ப்பாய்
நீதிகளை உலகிற்கே எடுத்து ரைத்து
நிற்கின்ற திருக்குறளில் சாதி உண்டா
வீதியெலாம் உயர்வெனநீ முழங்கும் சங்கம்
விளைவித்த இலக்கியத்தில் சாதி உண்டா
போதித்த யாவருமே கேளிர் சொல்லைப்
பொய்யாக்கிப் புரையாகிப் போனாய் இன்று !

மதமென்னும் மதம்பிடித்தே அலையு கின்றாய்
மனுதர்ம சாத்திரங்கள் உண்மை யென்று
விதவிதமாய்ப் பொய்சொல்லிக் கணவாய் வந்தோர்
விதைத்திட்ட மூடத்தின்

மேலும்

அருமை தோழர்.....நெகிழ்ந்துவிட்டேன் 15-Sep-2017 11:33 am
வாழ்த்திற்கு அகமகிழ்ந்த நன்றி 10-Jan-2015 4:27 am
பாராட்டிற்கு நெஞ்சார்ந்த நன்றி 10-Jan-2015 4:27 am

சாதி ஒழி மதம் அழி (பொங்கல் கவிதைப் போட்டி 2015)
பாவலர் கருமலைத்தமிழாழன்

சாதிக்கப் பிறந்திட்ட தமிழா உன்றன்
சாதனைகள் சாதிகளா எண்ணிப் பார்ப்பாய்
நீதிகளை உலகிற்கே எடுத்து ரைத்து
நிற்கின்ற திருக்குறளில் சாதி உண்டா
வீதியெலாம் உயர்வெனநீ முழங்கும் சங்கம்
விளைவித்த இலக்கியத்தில் சாதி உண்டா
போதித்த யாவருமே கேளிர் சொல்லைப்
பொய்யாக்கிப் புரையாகிப் போனாய் இன்று !

மதமென்னும் மதம்பிடித்தே அலையு கின்றாய்
மனுதர்ம சாத்திரங்கள் உண்மை யென்று
விதவிதமாய்ப் பொய்சொல்லிக் கணவாய் வந்தோர்
விதைத்திட்ட மூடத்தின்

மேலும்

அருமை தோழர்.....நெகிழ்ந்துவிட்டேன் 15-Sep-2017 11:33 am
வாழ்த்திற்கு அகமகிழ்ந்த நன்றி 10-Jan-2015 4:27 am
பாராட்டிற்கு நெஞ்சார்ந்த நன்றி 10-Jan-2015 4:27 am
சே குமார் - கிச்சாபாரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Aug-2016 11:43 pm

மானம் மிக்க பெண்ணாய் இருந்த பொழுதே...
பெண்களை மதிக்காத இச்சமூகம்...

மானத்தை கெடுத்த பின்
என்னை எப்படி மத்திக்கும்...இவ்வுலகம்?!

அனாதையாய் ஆக்கிய இச்சமூகத்தில்...
பிச்சையெடுத்து என் பசியை தீர்க்க...
என்னால் இயலாது...!

காரணம்
மன நலம் பாதிக்கப்பட்ட
பெண்களையும் குழந்தைகளையும்...
மானபங்கம் செய்யும் காமுகக் கூட்டம்...
என்னை இன்று சும்மா விடுமா?

ஆனாலும், என் வயிற்றுக்கு தெரியலையே...!
இவ்வுலகில் நிகழும் கொடுமைகள் எதுவும்...

என்ன செய்வது?
பசி படுத்தும் பாட்டை தெரிந்த ஒருவன்
விருந்தாளியாய் அழைத்து சென்றான்...
அவனை நம்பித்தான் சென்றேன்
பசியின் மயக்கத்தில்....!

அங்கு ச

மேலும்

கனத்த வரிகளை கடக்க முயலவில்லை இங்கே தங்கி வருந்திக் கொள்ளவே 14-Sep-2017 4:05 pm
வந்தமைக்கும் கருத்து பகிர்ந்தமைக்கும் நன்றிகள்! தொடர்ந்து என்னை ஊக்குவித்து வரும் தோழமைக்கு...! 14-Aug-2016 11:47 am
வலிகள் நிறைந்த வரிகள்..தாயின் கருவறை மறந்தவன் பெண்ணின் உடலை விளையாட்டு பொருளாக கருதுகிறான் 14-Aug-2016 9:33 am
சிறந்த வரிகள். பெற்றவளும் உடன் பிறந்தவளும் பெண்தான் என்பதை உணர மறுக்கிறது இந்த சமூகம். இதில் பெண்ணே பெண்ணுக்கு எதிரியாகவும் நிற்கிறாள். வாழ்த்துக்கள் ... 14-Aug-2016 8:08 am
சே குமார் - கவிஞர் அகரமுதல்வன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Dec-2015 11:33 pm

மீதியின் மீதியிலிருந்து
சிதையும் பகலை
இரவு ஒழிக்கிறது
அதன் மேற்பரப்பில் ஒளிரும் நிலா
பொய்யின் கனவுக்கு பாத்திரமானது
துடிக்கும் சில நட்சத்திரங்கள்
அதற்கே அந்நியமானது
நீங்கள் இரவைப் போர்த்திக் கொள்கையில்
தூங்கி விடுகிறீர்கள்
அல்லது புணர்கிறீர்கள்
எப்போதும் போல
அற்பத்தின் கனவுகளை காண்கிறீர்கள்
உங்களுக்கு தெரிந்திராத இரவுகள்
என்னிடம் இருக்கிறது
அதன் தோல் மெய்யின் கருவிலிருந்து
மழித்த பகலின் உரோமங்கள்
அதன் முகத்திலிருப்பது
மலினமான ஒரு இருட்டு
நான் மீதியின் மீதியிலிருந்து
எப்போதும் ஒரு சூரியனை திறக்கிறேன்
என் உதிரங்கள் சூரியக் கதிர்களாய்
உம் கழல் படுகிறது
அது உங்களுக்கு பகலாகவு

மேலும்

நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Dec-2015 2:47 am
அருமையான படைப்பு.. //நான் மீதியின் மீதியிலிருந்து எப்போதும் ஒரு சூரியனை திறக்கிறேன் என் உதிரங்கள் சூரியக் கதிர்களாய் உம் கழல் படுகிறது // என்ன கனமான வரிகள்.. வாழ்த்துக்கள்.. 29-Dec-2015 10:49 am
நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு சுனாமி ....நன்று ....வாழ்த்துகள் 29-Dec-2015 10:00 am
சே குமார் - செல்வமுத்து மன்னார்ராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Aug-2017 8:58 am

அழுது தீரும் சொந்தமா
மறக்ககூடிய பந்தமா
மண்ணில் மூடிவிடும் அந்தமா
என்னவென்று சொல்வேன்
அவளின் பாசத்தை
புனிதத்தில் புனிதமானவள்
ஞாலத்தில் அனைத்தும்
கீழுருக்க அவளின் தியாகம்
என்றும் மேலோங்கி நிற்கும்
தாய் நம் வாழ்வின் ஆதாரம்...

மேலும்

எந்த உள்ளமும் மறுப்புச் சொல்ல முடியாத நிதர்சனம் 25-Aug-2017 12:15 am
Thanks Boss for your comments... 24-Aug-2017 10:59 am
ஞாலத்தில் அனைத்தும் கீழுருக்க அவளின் தியாகம் என்றும் மேலோங்கி நிற்கும் தாய் நம் வாழ்வின் ஆதாரம்... சிறப்பு ..அருமை 24-Aug-2017 10:39 am
மேலும்...
கருத்துகள்

மேலே