எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பழக பழக வரும் இசை போலே, படிக்க படிக்க...

பழக பழக வரும் இசை போலே, படிக்க படிக்க வரும் கவிதை !! கவிதை மூலம் தமிழ் கற்கலாம்!


             மதநீர் பெருகும் யானையை போல் வலிமையும் பகைவரை கண்டு அஞ்சி ஓடாத வலிமையான தோள்களையும் உடையவனான நந்தகோபனின் மருமகள் நப்பின்னையே, நறுமணம் கமழும் கூந்தலை உடையவளே கதவை திற! பொழுது விடிந்து நாற்புறமும் கோழிகள் கூவுகின்றன, குருக்கத்திக் கொடிகளில்(மாதவி பந்தல்) மீது குயில்கள் அமர்ந்து கூவுவதைக் கேள்! பந்து பொருந்திய விரல்களை உடையவளே நாங்கள் கண்ணனின் பேர் பாட வந்துள்ளோம். உன் தோள் வளைகள் ஒலி எழுப்ப நீ எழுந்து வந்து, உன் செந்தாமரை கையால் கதவை திறவாய்!

            குத்து விளக்குகள் நாற்புறமும் சுடர் விட்டெரிய யானைதந்தத்தால் செய்யப்பட்ட கால்களை உடைய கட்டிலில், மென்மையான சயனத்தில்(படுக்கையில்), கொத்து கொத்தாக பூக்களை கூந்தலில் சூடிக்கொண்டு உறங்குகின்ற நப்பினையின் மார்பில் தலை வைத்து படுத்துறங்கும் கண்ணா நீ வாய் திறந்து ஒரு வார்த்தையேனும் பேசு! மை பூசியுள்ள அழகிய கண்களை உடைய நப்பின்னையே! அவனை விட்டு சிறிது நேரமும் பிரிய மனமில்லாததால் எவ்வளவு நேரமாகியும் கண்ணனை துயிலெழுப்பாமல் இருக்கிறாயே, இது உன் குணத்திற்கு தகுமோ?

நாள் : 29-Jan-19, 2:36 pm

மேலே