மேலே உள்ள படத்து ஏற்றதுபோல் ... மனசுல தோனுச்சு...
மேலே உள்ள படத்து ஏற்றதுபோல் ...
மனசுல தோனுச்சு எழுதினேன்...
பதினாறோ பதினேழோ- அவ
பருவம் தொட்டிருப்பா
மதியழகு கொண்டதால்- எவர்
மனதையும் கட்டியிழுப்பா
தண்ணி எடுத்துவர- தன்
தோழிக்காக காத்திருக்கா
பெண்ணினமே ஏங்கும்படி- உலகப்
பேரழகா பூத்திருக்கா
வெள்ளைப் புறாரெண்டு- மெதுவா
விளையாட பார்த்திருக்கா
கொள்ளை அழகோடு- அந்த
கோமகள் வேர்த்திருக்கா
பரிதி வெளிச்சம்- மெல்ல(ப்)
படரத் தொடங்கிருச்சே
புரியாத மொழிபேசிய- வெள்ள(ப்)
புறாரெண்டும் அடங்கிருச்சே...!