அ க செந்தில் குமார் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : அ க செந்தில் குமார் |
இடம் | : தோப்புக்கொல்லை (புதுக்கோ� |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 65 |
புள்ளி | : 12 |
அடிப்பெண்ணே…
சந்திர வதனத்தில்
ஜனித்தவளோ நீ?
உன் முகம் பார்த்த
மஞ்சல் செடியெல்லாம்
வெட்கித் தலைகுனிகிறதே...
தயவு செய்து உந்தன்
கார்குழல் கலையாதே
தாகம் தீர்க்க வந்த
மேகங்கள் கலைந்து
தாறுமாறாய் வேறெங்கோ
தப்பித்து ஓடுகிறது!
மொழிபிறை நெற்றியில்
பொழியும் செந்தூர பொட்டால்
அந்திநேர செவ்வானம்
அக்கம் பக்கம் பார்த்தபடி
அதிவேகமாய்
அடிவானுள் மறைகிறது!
இதழ்கள் திறந்து
ஏது படித்தாய் நீ
கூவும் குயில்களின்
குரலோசை கேட்கவில்லை!-தன்
குரல்வலை அறுத்து- தற்
கொலை கொண்டதா ? இல்லை
நாடுவிட்டு நாடு
நகர்ந்து விட்டதா?
வசந்தமே.- நீ
வாய் திறவாதே!
வாழட்டும் அந்த
வானிசை புள்ளினம்!
நீ
அடிப்பெண்ணே…
சந்திர வதனத்தில்
ஜனித்தவளோ நீ?
உன் முகம் பார்த்த
மஞ்சல் செடியெல்லாம்
வெட்கித் தலைகுனிகிறதே...
தயவு செய்து உந்தன்
கார்குழல் கலையாதே
தாகம் தீர்க்க வந்த
மேகங்கள் கலைந்து
தாறுமாறாய் வேறெங்கோ
தப்பித்து ஓடுகிறது!
மொழிபிறை நெற்றியில்
பொழியும் செந்தூர பொட்டால்
அந்திநேர செவ்வானம்
அக்கம் பக்கம் பார்த்தபடி
அதிவேகமாய்
அடிவானுள் மறைகிறது!
இதழ்கள் திறந்து
ஏது படித்தாய் நீ
கூவும் குயில்களின்
குரலோசை கேட்கவில்லை!-தன்
குரல்வலை அறுத்து- தற்
கொலை கொண்டதா ? இல்லை
நாடுவிட்டு நாடு
நகர்ந்து விட்டதா?
வசந்தமே.- நீ
வாய் திறவாதே!
வாழட்டும் அந்த
வானிசை புள்ளினம்!
நீ
விண்ணாட்டில் தோன்றும்வெண் வண்ண நிலவேநீ
மண்ணாட்டில் வந்துதித்த மாயமென்ன- கண்ணசைவில்
கல்நெஞ்சை கலங்கடிக்கும் கலைகற்ற தெங்கேவா
மல்யுத்தம் கொள்வோம் மகிழ்ந்து.
நான்பணிந்த தந்தநாத நாயகனின் தாளன்றி
ஊன்நெஞ்சம் கொண்டாரின் ஊளையல்ல- ஆன்மிகத்
தேடுதல் உயர்ந்த தவமென் றுணராதார்
பாடுபொரு ளெல்லாம் பதர்.
கனியமுதும் பால்கலந்த கற்கண்டும் சேர்த்துன்
புனிதமிக்க பாதத்தில் பூவைத்து – வானில்
கதிருதிக்கும் முன்னமே கண்மூடி நித்தம்
துதிப்பேன் தகரென் துயர்.
அழியாத ஓவியமே அற்புதமே எந்தன்
விழிகள் உறங்கவில்லை விண்மகளே - ஆழியுள்
மூச்சடைத்து கண்டெடுத்த முத்துமணி உன்விழிவேல்
வீச்சால் விடைதா விரைந்து.
வானில் வந்துதித்த வெண்ணிலவே நீதரும்
தேனின்பத் தீண்டலால் தேறினேன் - இனியென்
மனதில் துயரம் மறைந்தோடும் இன்பம்
எனக்கு தொடர்கதை யாம்.
துயர்நேரின் வெம்பாது துக்கம் துடைத்தால்
உயர்வின் நிலைஉனக்கும் உண்டு - அயராது
பாடுபட்டால் வானமும் பாதையிடும் வையமும்
பாடுமே உன்வான் புகழ்.