எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சின்ன சின்ன ஏமாற்றங்கள் . —————————————- சின்ன சின்ன...

                   சின்ன  சின்ன ஏமாற்றங்கள்.


                 —————————————-
       சின்ன சின்ன ஏமாற்றங்கள் நம்மைச்


       சிதற. செய்யும்  ஏமாற்றங்கள்!
        அடுத்த வீட்டிற்கு  மட்டும்  கடிதம் போடும்


         அஞ்சலக அலுவலர்  நம் வீட்டைகத் தாண்டும் போது


        அடையும்  ஏமாற்றம் !


       


        கொழுகொழுவென அன்னைக்  கையில் அழகாய் சிரிக்கும்


         குழந்தை நம் கையில் வந்தவுடன் அழும்போது


         ஏற்படும் ஏமாற்றம்!
          லாட்டரி சீட்டில் நம் எண்ணிற்கு அடுத்த எண்


          லட்சணமாய் நாளேற்றில் அச்சேறி


          ஏற்படுத்தும் ஏமாற்றம் !
          மூச்சு வாங்க ஓடிவந்தும் நாம் பிடிக்க முயன்றும்


          முடியாமல், நகர்ந்து ஓடும் பேருந்தை பின்னால் நின்று


          பார்க்கும்  ஏமாற்றம் !
           அன்புடன்  பறித்துச்  சென்ற  ரோஜா மலர் 


           அவளிடம்  கொடுக்க  எண்ணி  எடுக்கையில்


            இதழ்களெல்லாம்  உதிர்ந்து வெறுமையாக -அவன்


             இதயம்  துடிக்கும்    ஏமாற்றம்!
           இவை எல்லாம்   சின்ன சின்ன ஏமாற்றங்கள் தான் 


             எனினும் ,


             நல் ஆட்சி மலரும் என ஓட்டுக்களை அளித்து 


             கல்லாக காத்திருக்கும்  மக்களுக்கு 


             ஒவ்வொரு  முறையும் ஏற்படுவது


             சின்ன சின்ன ஏமாற்றந்தானா?பதிவு : சாந்தா
நாள் : 7-Feb-19, 7:12 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே