14 . நிலவை தேடி நிலவை தேடி என்...
14 . நிலவை தேடி
நிலவை தேடி என் பயணம் - கண்டால்
அடைவேன் நான் சரணம்
நின்முகம் காண - கொஞ்சம்
கீழிறங்கி வரணும் - கொஞ்சி
கொஞ்சி உன்னோடு நான் பேசணும்
நாணம் வந்து உனைத் தடுக்க
நலம் நானும் போர்தொடுக்க
வெட்கத்தில் நீ மறைகிறாய் - என்னை
வேட்க்கையில் தவிக்க விடுகிறாய்
மேகக் கூட்டம் நடுவினிலே
மேனிமறைத்து ஆடுகின்றாய்
மோக முள்ளில் என்னை குத்தி
தேகம் காயம் கொடுக்கின்றாய்
சிரித்து மாயம் செய்கின்றாய்
ஜீவனுருக செய்கின்றாய்
உயிர் காற்றை மாற்றிச்சென்றாய்
உயிரே பிரிந்து ஏன் சென்றாய்
கோபம் கொள்ளாதே - கண்களால்
குத்தி கிழிக்காதே
உள்ளகிடைக்கையின் ஆசைகள்
ஆயிரம் ஆயிரம் இங்கே - ஒளிந்து
நீ வாட்டினால் உரைப்பது நான் எங்கே
வா வா வெண்ணிலவே
சுகம் தா தா வெண்ணிலவே !
அன்பன்
மு.ஏழுமலை
9789913933