எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

19 . கணக்காயர்களுக்கு சமர்ப்பணம் மனமே மனமே நீ...

19கணக்காயர்களுக்கு சமர்ப்பணம்


மனமே மனமே  நீ மயங்காதே 
குணமே குணமே 
நீயென்றும் குறையாதே
நீயில்லையென்றால் நிலைமாறும் பூமி 
நீதானே எங்க நெசமான சாமி !

அறிவுக்கு நீயென்றும்  ஆதாரம் 
அனுவளவுமில்லை அகங்காரம்
அனுதினம் எறும்பாய் நீ உழைத்து 
அறிவுதனையே தான் கொடுத்து 
அச்சந்தனையே நீக்கிடுவாய் 
அகல் விளக்காய் நீ ஒளிர்திடுவாய் !

கருவறை தாயாய் அவதரிப்பாய் 
கருணையோடு கற்றுத்தருவாய் 
கலங்கரை விளக்காய் நீயிருப்பாய்
தவறுகள் செய்கையில் நீ பொறுப்பாய் 
தோணியாய்  ஏணியாய் நீ மாறி 
ஞானிகளைத்தான் தந்திடுவாய் 

வணக்கத்துடன் 
மு. ஏழுமலை
    9789913933



பதிவு : மு ஏழுமலை
நாள் : 1-Mar-19, 11:20 am

மேலே