எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எஸ்.எம்.எஸ். மூலம் வாக்குச்சாவடியை அறிந்து கொள்ளும் புதிய வசதியை...

எஸ்.எம்.எஸ். மூலம் வாக்குச்சாவடியை அறிந்து கொள்ளும் புதிய வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''வாக்காளர்கள், 9444123456 என்ற செல்போன் எண்ணிற்கு, epic என ஆங்கிலத்தில் டைப் செய்து சிறிது இடைவெளிவிட்டு, உங்களுடைய வாக்காளர் அட்டையாள அட்டை எண்ணையும் டைப் செய்து எஸ்.எம்.எஸ். அனுப்பினால், உடனடியாக உங்களுடைய செல்போன் எண்ணிற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம் குறித்து முழு விவரமும் எஸ்.எம்.எஸ். மூலம் கிடைக்க பெறும்'' எனக் கூறப்பட்டுள்ளது.

பதிவு : கீத்ஸ்
நாள் : 21-Apr-14, 12:15 pm

மேலே