33 . பனித்துளியோடு உரையாடல் தொட்டபோது தொலைந்து போனாய்...
33. பனித்துளியோடு உரையாடல்
தொட்டபோது தொலைந்து போனாய்
கைப்பட்டபோது கலைந்துபோனாய்
அருகரமர நினைத்தபோது - ஆவியாய்
மறைந்து போனாய் - எண்ணங்களை
ஆயிரம் ஆயிரமாய் பிரதிபலிக்கிறாய்
நாம் ஆசையோடு அணைக்கையில் - அழகே
என்னை ஏமாற்றி செல்கிறாய்
வெண்பனியே. . . நல்வெண் முத்தே. .
வெள்ளைமனதில்லை போலும் உனக்கும்
விளையாட வரும் வாலிபனை
விம்மி அழச்செய்கிறாய்
வினைசெய்யும் நங்கைபோல
புல்வெளியில் பூத்து குலுங்குகின்றாய்
பச்சியிலையில் பாடித்திரிகின்றாய்
நான் புன்னைகையோடு தொட்டால் - ஏனோ
புதிரான்கின்றாய்
முகிலோடு உறவாடுகின்றாய்
கதிரோடும் காதல் கொள்கின்றாய்
காளையான் தொட்டால்மட்டும் - ஏனோ
கண்ணாமூச்சி ஆடுகின்றாய்
ஏனிந்த மோகம் ?
என்மீது கோபம்
என்னவளும் சொன்னாலோ
என்னை நீ தீண்டக்கூடாதென்று!
மு. ஏழுமலை