எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிறுபான்மை ,பெரும்பான்மை எனும் மனப்பான்மை நமது சமுதாயத்தில் ஏன்,...


சிறுபான்மை ,பெரும்பான்மை எனும் மனப்பான்மை நமது சமுதாயத்தில் ஏன், எப்படி வந்தது ?


அரசியல் ஒரு முக்கியக் காரணி என்றாலும் நான் அறிந்தவரை பொதுவாக மக்களின் ஆழ்மனதிலும் இந்த எண்ணம் எழுகிறது என்பதை மறுக்க முடியாது நிச்சயம் . இதை பலரிடமும் பேசும்போதும் பழகும் போதும் நன்கு உணர்கிறேன் . 

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் சாதி மதமெனும் நச்சுக்காற்றை நாம் சுவாசிப்பதால் தான் . 

அகிலத்தில் அனைவரும் சமம் என்கிற நிலை அடித்தளம் முதல் மேல்மட்டம் வரை வந்தால் மட்டுமே , இந்த நஞ்சை நெஞ்சிலிருந்து அகற்ற முடியும். இதை நாம் காண்போமா என்று தெரியாது . 

ஆனால் வருங்கால சந்ததிகள் இதை உருவாக்கட்டும் . 

​​   
  பழனி குமார்               

நாள் : 29-Jul-19, 10:06 pm

மேலே