எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்னை பற்றி, நான் டிப்ளமோ மின்னணு பொறியாளர். தனியார்...

என்னை பற்றி, 


நான் டிப்ளமோ மின்னணு பொறியாளர். தனியார் நிறுவனம் ஒன்றில் மூன்று வருடங்கள் பணி புரிந்து, தொழில் கற்று கொண்டு, பின் சுயமாக, சென்னை திருவல்லிக்கேணியில், ஜெராக்ஸ் இயந்திரம் விற்பனை, மற்றும் அதனை பழுது பார்த்தல் தொழிலை கடந்த இருபது ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். தமிழ் மீது எனக்கு ஆறாவது படிக்கும் காலத்தில் இருந்தே காதல் தொடங்கியது. காரணம் எனக்கு தமிழ் சொல்லி கொடுத்த ஆசிரியர் திரு. புலவர் ஆறுமுகம் அவர்கள். மிக அருமையாக தழிழ் பாடம் நடத்துவார். பின் டிப்ளமோ படிக்கும் போது ஏறகுறைய தமிழை மறந்தே விட்டேன் என்று கூட சொல்லலாம். பிறகு வேலை, அதன் பின் வியாபாரம் என்று வாழ்க்கை பயணிக்க, திரும்பவும் தமிழ் மீது அக்கறை, என்னுடைய கைபேசியால் வந்தது. பட்டிமன்றம், கவியரங்கம், விவாதமேடை இப்படி பல தமிழ் அறிஞர்களின் அபார பேச்சு என்னை கவர்ந்தது. மிகவும் ஈர்த்தது. ஞாயிறு மாலை வேளையில் தொலைக்காட்சி பார்பதை தவிர்த்து, தமிழில் எழுத தொடங்கினேன். எழுதுவதற்கான தளத்தை தேடினேன். எழுத்து.காம் என் எண்ணத்தை பூர்த்தி செய்தது. தமிழ் மிக பெரிய சமுத்திரம். நான் கற்ற தமிழ் துளி கூட இல்லை. அந்த துளியை கடலாக நினைத்து ஏதோ எனக்கு தெரிந்ததை எழுதுகிறேன். தொடர்ந்து ஆதரவு தரும் இந்த தளத்தில் உள்ள உறுப்பினர்களுக்கும், மற்றும் கவிதையை படிக்கும் அன்பர்களுக்கும் என் கோடி நன்றிகள். என் எழுத்துகளை உலகறிய செய்த எழுத்து.காம் க்கு என் நன்றிகள். வாழ்க தமிழ். தமிழால் அனைவரும் இனைந்தோம்
 தமிழை காப்போம்.

பாலு
:  திருவொற்றியூர்
================================
: Visit pl 
Read & Shared Balu's  Poems 182--Stories 9 to my friends and relatives .
V.Avudaiappan B.Pharm 
Kadayanallur 

நாள் : 6-Aug-19, 2:45 am

மேலே