எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மழை காதலன் ♥️ மழையே!!! உன்னை பார்க்கும் போதும்,...

மழை காதலன் ♥️

மழையே!!! உன்னை பார்க்கும் போதும், நினைக்கும் போதும் மனதில் எண்ணிலடங்கா ஆனந்தம்...
ஏனோ தெரியவில்லை உன் மீது ஏன் இவ்வளவு காதல் என்று!!
உன் குரலை கேட்கும் போதெல்லாம் மனதில் எண்ணிலடங்கா மகிழ்ச்சி!!
உனக்கும் என் மீது காதலோ என்னவோ நான் உன்னை நினைக்கும் போதெல்லாம் நீ என்னை காண வருகிறாய்!!!
நீ மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் உன்னையே மணம் முடித்திருப்பேன்!!!
முன் ஜென்மத்தில் நீ எனது தோழியாகவோ அல்லது துணையாகவோ கூட இருந்திருக்கலாமோ என்னவோ!!!!
உன்னை நினைத்தால் மனம் எங்கும் பரவசம்!!!
தனிமையின் போது உன் குரலை கேட்டால் தனிமை கூட இனிமை ஆகுதே ஏனடி கண்ணே!!!!
எனக்கு தெரியும் நீ மிகவும் அழகானவள் என்று!!
எப்படி தெரியுமா!! நீ இசைக்கும் அழகான குரலை மெருகேற்ற உன் நண்பர்களான மின்னலின் வெளிச்சமும், இடியின் இசையும் உன் அழகை மெருகூட்டுகிறது!!!!
மழையே!!! உன் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் உன் அன்பு மழை காதலன்!!!!!!

பதிவு : Vengat
நாள் : 10-Sep-19, 11:38 am

மேலே