அனுபவம் தந்தப் பாடம் ------------------------------------- எதிர்பாராத சோக நிகழ்வுகள்...
அனுபவம் தந்தப் பாடம்
-------------------------------------
எதிர்பாராத சோக நிகழ்வுகள் நமது வாழ்க்கையில் நேரும்போது அதனை எதிர்கொண்டு கடந்து செல்வது நமக்கு பழகிவிட்ட ஒன்று .
அப்படி இருக்கையில் நாம் எதிர்பார்த்த ஒரு சோகமோ கவலைதரும் நிகழ்வோ நடைபெற்றால் , அதை நாம் மிக எளிதாக எதிர்கொள்ள நம்மை நாமே தயார் செய்து கொள்வதும் , கடந்து செல்வதும் தவிர்க்க முடியாத ஒன்றாகும் .
கூட்டலும் கழித்தலும் , இன்பமும் துன்பமும் , சரிவும் உயர்வும் , ஈட்டலும் இழத்தலும், துயரமும் மகிழ்ச்சியும் மாறிமாறி வருவதுதானே வாழ்க்கை !
இந்த அடிப்படை தத்துவத்தை , கோட்பாட்டை செவிவழியாகவும் , ஆய்ந்து அறிந்தும் , வாசித்துத் தெரிந்தும் , அனுபவத்தின் வாயிலாகவும் அனைவரும் புரிந்து கொண்டால் நமக்குள் அமைதியும் தெளிவும் நிலைத்திருக்கும் என்பது நான் கற்றுக்கொண்ட பாடம் .
பழனி குமார்
11.09.2019
11.09.2019