எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நடைபாதை நகரம்( நரகம்) கார்பன் கரி படிந்த முகமும்...

நடைபாதை நகரம்( நரகம்)


கார்பன் கரி படிந்த முகமும்
கிழிந்த சட்டையும் அவனை அடையாள படுத்தியது
அவன் இந்த நகர வாழ்க்கையின்
நடைபாதை மனிதன் என்பதை..

காட்சி பொருளாக்கப்பட்ட உணவு கடைகளை
வெரித்து  பார்த்த படி அவனின்
அருந்த செருப்புகள் நகர மறுத்தன...

தினமும் பசியுடன் தோற்றும்
இன்றும் அவன் கேட்க தொடங்கி விட்டான்

ஐயா...
இந்த புத்தகம் பத்து ரூபாய் வாங்கிக்கொள்ளுங்கள் என்று. 

பதிவு : துளசி
நாள் : 13-Sep-19, 6:59 pm

மேலே