எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இடமாற்றம் தந்திடும் இதயத்தில் மாற்றம் --------------------------- ---------------------------------------------- ஒரு...

  இடமாற்றம் தந்திடும் இதயத்தில் மாற்றம்
--------------------------- ----------------------------------------------


ஒரு சிலர் அலுவல் பணி காரணமாக அல்லது அடிக்கடி பணியினை மாற்றிக்கொள்வதன் காரணமாகவும் , அல்லது இல்லம் மாறிடும் எண்ணம் காரணமாகவும் , பல்வேறு சூழ்நிலை காரணமாகவும் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு , வேறு பகுதிக்கு , வேறு நகரத்திற்கு அல்லது வேறு மாநிலத்திற்கும் இல்லத்தை மாற்றிடும் நிலை வருகிறது. அப்படி மாறும்போது , ஏற்கனவே இருந்த இடத்தைவிட்டு நகர்வது மனதை ஏதோ ஒரு இனம்புரியா மன அழுத்தத்திற்கு தள்ளப்படுவர் . இது இயற்கை.

மேலும் குடியிருந்த இடத்தில் கிடைத்த நல்ல சூழலும் நட்புகளும் வசதிகளும் , செல்கின்ற இடத்தில் அமையுமா என்ற கேள்வியும் எழும் என்பதில் ஐயமில்லை . அதிலும் வேறு மாநிலமாக இருந்தால் கேட்கவே வேண்டாம் . இவை அனைத்தும் புதிய இடத்தில் சென்று பலநாட்கள் கழிந்தபின் மறைந்து விடும் என்பதும் உண்மை.

ஆனால் இப்போது பலர் வேறு நாட்டிற்கே சென்று குடியேறும் நிலைக்கு வந்துவிட்டனர் . அவர்கள் என்னதான் வசதியும் வாய்ப்புகளும் குவிந்து இருந்தாலும் , இதயத்திற்கு இதமளிக்கும் சூழல் நிறைந்து இருந்தாலும் , தாய்நாட்டை விட்டு வந்ததும் , உறவுகள் மற்றும் நட்புகளை விட்டு விலகி சென்றதும் மனம் வலித்துக் கொண்டே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை .ஆனாலும் இவை அனைத்தும் சிலகாலம் நகர்ந்தபின் குறையத் தொடங்கும். அங்குள்ள நிலைக்கு ஏற்ப நம்மிடம் மாற்றம் காணப்படும் . அங்கு அமைகின்ற நட்புகளும் ஒரு முக்கிய காரணமாக இருந்திடுவர். சுழலும் பூமி போல நமது வாழ்க்கையும் சுழல்கின்ற ஒரு வண்டிச் சக்கரம்தான் என்பதை புரிந்தால் நமது உள்ளம் உணர்ந்து , புதிய இடமும் சூழலும் நமக்கு பழகிவிடும் . இது நடைமுறையில் பலரும் எனக்கு கூறிய அனுபவத்தின் பக்கம் .

( ஆனால் நான் வேறு எங்கும் சென்றதில்லை இதுவரை , இனியும் வாய்ப்பில்லை என்பதும் உண்மை. )


பழனி குமார்
09.11.2019  

நாள் : 9-Nov-19, 2:52 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே