எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நவம்பர் மாத தமிழ் கவிதைப்போட்டி முழு விவரம்பரிசு ரூபாய்...

  நவம்பர் மாத தமிழ் கவிதைப்போட்டி

 முழு விவரம்பரிசு ரூபாய் ௫௦௦
எழுத்தாளர்கள் அனைவருக்கும் வணக்கம். 
இந்த மாதம் நடைபெறக்கூடிய கவிதைப் போட்டி பற்றிய முழு தகவல் இந்த பக்கத்தில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது. 
எழுத்தாளர்கள் அனைவரும் தங்களின் கவிதைகளை சமர்ப்பித்து போட்டியில் பங்கு பெறலாம். போட்டிக்கான விதிமுறைகள் பற்றிய முழு தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முழுமையாக படித்து போட்டியில் பங்கு பெறவும்.
நவம்பர் மாதம் சார்பில் கவிதை போட்டி நடைபெறுகிறது. 
இதில் வெற்றி பெறும் எழுத்தாளர்களுக்கு ரூபாய் 500 ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது. அவர்களின் வங்கி கணக்கிற்கு பணம் அல்லது இல்ல முகவரிக்கு புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.

நீங்கள் உங்களுடைய விருப்பத்தின் பெயரில் ஏதேனும் கவிதை, கட்டுரை, சிறுகதை, போட்டிகள் நடத்த விரும்பினால் எங்களுடைய தளத்தில் நீங்கள் தாராளமாக போட்டிகளை நடத்தலாம். போட்டிகளை நடத்த விரும்புபவர் எங்களுடைய மின் அஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம். உங்களுடைய தலைப்புகள், பரிசு தொகை, போட்டி நடத்தப்படும் காலம் இவற்றை தெரிவித்து எங்களுக்கு மின்னஞ்சல் ( eriumyedu@gmail.com) அனுப்பலாம். 

கடந்த மாதங்களில் நடைபெற்ற கவிதைப் போட்டிக்கான பரிசுகள் வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.எரியும் ஏடு தளத்தின் சார்பாக நடத்தப்படும்

நவம்பர் மாத கவிதைப் போட்டிக்கான தலைப்புகள்

முதல் தலைப்பு :  மலக்குழி மரணங்கள் (மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவது சட்டப்படி தடை செய்யப்பட்டும், அத்தகைய தொழிலில் ஒருவரை ஈடுபடுத்துவது குற்றம் என்றாலும், நாள்தோறும், கழிவுநீர் தொட்டியிலும், மலக்குழிகளிலும் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இந்த மரணங்கள் பற்றிய தெளிவான பார்வையில் ஒரு கவிதை )

இரண்டாவது தலைப்பு   : ஆழ்துளை மரணக்குழிகள் (தற்போது ஆழ்துளை கிணற்றில்  விழுந்து  அரசாங்கத்தால் காப்பாற்ற முடியாமல் இறந்து போன இரண்டு வயது  சிறுவன் சுர்ஜித் பற்றியும் ஆழ்துளை கிணறு மரணங்கள் பற்றியும் தெளிவான பார்வையில் ஒரு கவிதை )

மூன்றாவது தலைப்பு : கீழடி தமிழனின் அறிவு (கீழடி தமிழர்கள், தமிழர்களின் வாழ்வு அவர்களின் சிந்தனை அவர்களின்  நிர்வாக கட்டமைப்பு, கீழடி தொல்லியல் சார்ந்த தகவல்கள் பற்றிய தெளிவான பார்வையில் ஒரு கவிதை ) 

கொடுக்கப்பட்ட மூன்று தலைப்புகளில், ஒரு தலைப்பின் கீழ் ஒரு கவிதை வீதம்  மூன்று கவிதை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.ஒரு தலைப்பின் கீழ் ஒரு கவிதையை நீங்கள் சமர்ப்பிக்கலாம்.ஒருவர் மொத்தம் மூன்று கவிதைகளை சமர்ப்பிக்க வேண்டும்

 ஒவ்வொரு தலைப்பின் கீழும் ஒரு கவிதை ஆக மொத்தம் மூன்று கவிதைகள் சமர்ப்பிக்க வேண்டும் மூன்று தலைப்பில் எழுதாமல்,  ஒரே ஒரு தலைப்பில் ஒரு கவிதை மட்டுமே சமர்ப்பிக்கும் போது (இரண்டு தலைப்பில் எழுதாமல் இருப்போர்) அது போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.மூன்று தலைப்பின் கீழும் கவிதை சமர்ப்பிக்கப்பட்ட எழுத்தாளர்களின் கவிதை மட்டுமே போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

எடுத்துக்காட்டாக பாரதி என்ற எழுத்தாளர் ஒரு கவிதைப் போட்டியில் கலந்து கொண்டால், கொடுக்கப்பட்ட மூன்று தலைப்புகளிலும் அதாவது மலக்குழி மரணங்கள்  இந்த தலைப்பின் கீழ் ஒரு கவிதையும் ஆழ்துளை மரணக்குழிகள்  என்ற தலைப்பின் கீழ் ஒரு கவிதையும் கீழடி தமிழனின் அறிவு  என்ற தலைப்பின் கீழ் ஒரு கவிதையும் சமர்ப்பிக்க வேண்டும். போட்டிக்கான பரிசு தொகை ரூபாய் 500 அல்லது 500 ரூபாய் மதிப்புள்ள புத்தகம் போட்டி தொடங்கும் நாள் : 4-11-2019போட்டி முடியும் நாள் : 30-11-2019தேர்வு பட்டியல் அறிவிப்பு நாள் : 7-12-2019இறுதி பட்டியல் அறிவிப்பு நாள் : 8-12-2019வெற்றியாளர் அறிவிப்பு நாள் : 14-12-2019பரிசு அனுப்பப்படும் நாள் : 15-12-2019 முதல் பரிசு 250 ரூபாய் அல்லது 250 ரூபாய் மதிப்புள்ள புத்தகம் இரண்டாம் பரிசு 150 ரூபாய் அல்லது 150 ரூபாய் மதிப்புள்ள புத்தகம் மூன்றாம் பரிசு ரூபாய் அல்லது 100 ரூபாய் மதிப்புள்ள புத்தகம் இவை அனைத்தும் வெற்றி பெற்ற எழுத்தாளர்களின் வங்கி கணக்கிற்கு பணம் அல்லது இல்ல முகவரிக்கு புத்தகம் அனுப்பி வைக்கப்படும் கவிதை எழுதுவதற்கான விதிமுறைகள் எவ்வாறு கவிதை சமர்ப்பிக்க வேண்டும் என்ற அனைத்து படிநிலைகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தளத்தில் இதுவரை பதிவு செய்யாதவர்கள் தளத்தில் பதிவு செய்த பிறகு உங்கள் கவிதையை பதிவு செய்யலாம்.போட்டியின் விதிமுறைகள் என்ன என்பதை ஒரு முறை வாசித்துக் கொள்ளவும் அதன் பிறகு கவிதை சமர்ப்பிக்கவும்.கவிதையை ஏட்டில் எழுத இங்கே சொடுக்கவும் முதல் பரிசு :250 ரூபாய் அல்லது 250 ரூபாய் மதிப்புள்ள புத்தகம்இரண்டாம் பரிசு :150 ரூபாய் அல்லது 150 ரூபாய் மதிப்புள்ள புத்தகம்மூன்றாம் பரிசு :100 ரூபாய் அல்லது 100 ரூபாய் மதிப்புள்ள புத்தகம்புதிய எழுத்தாளர் எனில் தளத்தில் பதிவு செய்யவும்பதிவு செய்ய சொடுக்கவும்ஏற்கனவே பதிவு செய்த எழுத்தாளர் எனில்உள்ளே நுழைய சொடுக்கவும்விதிமுறைகள் :கவிதை உங்களுடையதாக இருக்க வேண்டும்.தலைப்பில் உள்ள பொருளோடு கவிதை இருக்க வேண்டும்.கவிதை தலைப்புடன் உங்கள் பெயரை இணைத்து பதிவிடவும்.(எ.கா  கவிதை தலைப்பு - உங்களின் பெயர் )குறைந்தபட்ச வரிகள் : இருபதுஅதிகபட்ச வரிகள் : நாற்பது கவிதையின் முடிவில் உங்களின் பெயர், ஊர்,  மற்றும் மின்னஞ்சல் முகவரியை அளிக்க வேண்டும்.உங்கள் கவிதை இறுதி பட்டியலில் இடம் பெற்றால் உங்களின் அலைபேசி எண்ணை எங்களின் மின்னஞ்சல் (eriumyedu@gmail.com) முகவரிக்கு அனுப்பவும்பெயர், ஊர்  மற்றும் மின்னஞ்சல் முகவரி இல்லாத பதிவுகள் இறுதிப் பட்டியலில் இடம் பெறாது.உங்களின் கைபேசி எண்ணை கவிதையில் கொடுக்க வேண்டாம்.கவிதையை எரியும் ஏடு தளத்தில் பதிவிட வேண்டும். முடி சில தினம்தளத்தில் உள்ள “ஏட்டில் எழுத” என்ற பக்கத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.தளத்திற்கு நீங்கள் புதிய உறுப்பினர் எனில் முதலில் தளத்தில் உங்களை பதிவு (Register) செய்து கொண்டு பின்னர் கவிதையைப் பதிவிடவும்.பதிவு செய்ய சொடுக்கவும்“ஏட்டில் எழுத” என்ற பக்கம் தளத்தில் மூன்றாம் பக்கமாய் உள்ளது.கவிதையை சமர்ப்பிக்கும் முன் கொடுக்கப்பட்ட Category யில் “Kavithai Potti Nov 19” என்பதை தேர்வு செய்து பதிவிடவும்.உங்களின் கவிதை சிறப்பாக இருப்பின் சமர்ப்பிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் உங்களின் படைப்பு நமது தளத்திலும் இடம்பெறும்.தளத்தில் இடம்பெறும் கவிதைகள் மட்டுமே தேர்வு பட்டியலில் இடம் பெறும்.உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருப்பின் eriumyedu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும். போட்டிக்கு மட்டுமில்லாமல் உங்களின் தனிப்பட்ட கவிதைகளையும் நீங்கள் தளத்தில் சமர்ப்பிக்கலாம்.போட்டிக்கு மட்டுமே எழுதும் எழுத்தாளர்களை விட தொடர்ந்து எழுதக்கூடிய எழுத்தாளருக்கு மட்டுமே முன்னுரிமை தரப்படும். போட்டிகளில் மட்டுமே பங்கு கொண்டு வேறு கவிதைகள் எழுதாமல் இருக்கும் எழுத்தாளர்களுக்கு முன்னுரிமை தரப்படமாட்டாது. இது தொடர்ந்து எழுதக்கூடிய எழுத்தாளர்களே ஊக்கப்படுத்த மட்டுமே.

நன்றியுடன்,
எரியும் ஏடு – பல்லுயிர் கூடு   

பதிவு : லாவண்யா
நாள் : 7-Nov-19, 7:51 pm

மேலே