எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எத்தனை பேர் "உண்மை"யாக வாழ்கிறார்கள் ? இதற்கு நேர்மையாக...

எத்தனை பேர் "உண்மை"யாக வாழ்கிறார்கள் ? இதற்கு நேர்மையாக எவரும் பதில் கூற முடியுமா உடனடியாக ?


இது ஒரு விசித்திரமான கேள்வி தான் . பதில் கிடைக்கும்... ஆனால் எல்லோரும் சற்று யோசித்து தான் பதில் கூறுவார்கள் . அந்த குறுகிய நேரத்தில் , அந்த சில நொடிகளில் அனைவரும் தம்மைத் தாமே ஒரு சுயபரிசோதனை செய்து கொள்வார்கள் . காரணம் , பொய்யாக வாழ்பவர்கள் பதில் கூற சற்று தயங்குவார்கள் . 

உண்மையாக சிலர் வாழ்ந்தாலும் ஒருமுறை யோசித்து , ஏதேனும் தவறு செய்திருக்கிறோமா அல்லது தாம் உண்மை நிலையிலிருந்து எப்போதாவது தவறி இருக்கிறோமா என்று நினைக்கத் தொடங்குவர் . என்னையும் சேர்த்தே கூறுகிறேன் . நெஞ்சில் ஒரு அலசல் நிகழும் . இது இயல்பான ஒன்று .

இதை நான் இங்கே சுட்டிக்காட்டுவதன் நோக்கம் , இன்றைய காலத்தில் சில நேரங்களில் , நடந்திடும் சில நிகழ்வுகளால் உண்மை எது , பொய் எது என்று தெரியாமல் போகிறது . ஒரு குழப்ப நிலையே உருவாகிறது . இன்னும் கூற வேண்டுமானால் , உண்மையும் பொய்யும் ஒரே மாதிரியாக தெரிகிறது . நம்மால் எதையும் ஊகிக்க முடியவில்லை . சிலர் உண்மையை மறைக்க , சுயநலத்திற்காக , சந்தர்ப்ப சூழ்நிலையால் பொய்யாகவும் நடக்க வேண்டியுள்ளது . மறுப்பதற்கில்லை .

இது அரசியலில் மட்டுமல்ல , பொதுவாழ்விலும் கண்கூடாக காண்கிறோம் . உண்மை இருளில் உறங்குகிறது , பொய் வெளிச்சத்தில் வேடமிட்டு ஆடுகிறது . என்ன உலகம் இது ? நாம் உள்ளவரை உண்மையாக வாழ்வோம் .இந்தப் பதிவு பலருக்கும் குழப்பமாக இருக்கும் . ஆனாலும் இதுதான் இன்று யதார்த்தம் .


பழனி குமார்
03.12.2019

நாள் : 3-Dec-19, 9:32 am

மேலே