ஜன்னல் ஓரத்தில் நான் வெயிலும் இல்லை மழையும் இல்லை...
ஜன்னல் ஓரத்தில் நான்
வெயிலும் இல்லை
மழையும் இல்லை
தாகம் தணிக்க நீறும் இல்லை
பேருந்து கிளம்பி நேரம் ஆனது
வேடிக்கை பார்ப்பதே வேலை ஆனது
இயற்கை என்னை ஊற்று பார்த்தது
ரசிக்க தெரியாத மக்கு என்றது
சாலை கடக்கும் தேவதைகளின்
எண்ணிக்கை நூறை தாண்ட
பார்த்து சலித்து அலுத்து போன
கண்கள் குட்டி தூக்கம் போட
கூச்சல் சத்தம் காதை கிழிக்க
குட்டி தூக்கம் காற்றில் பறக்க
இதமான காற்று
இறுக்கமான மனது
நெருக்கமான மக்களால் ஒதுக்கப்பட்ட ஓரத்தில்
ஆம் ஜன்னல் ஓரத்தில் நான்...