அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சிந்திய அன்பினில் சிந்தை நெகிழ்ந்து......
அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து
சிந்திய அன்பினில்
சிந்தை நெகிழ்ந்து...
அன்பை
வரிகளால்...
செதுக்க நினைத்து..
வார்த்தைகள்...
ஏனோ வர மறுத்து..
அதை வாதம் செய்து வரவழைத்து …
உணர்ச்சிப்பெருக்கில்..
அம்மாவிற்கு நான் எழுதும் கவிச்சோலை.
60 வது பிறந்தநாள் காணும் என் அம்மாவிற்கு
60 வரிகளில் கவி மாலை.
1. அசந்து போகும் ஆளுமையின் அடையாளம்.
2. புயலையும் தென்றலாக்கும் தைரியம்.
3. ஆச்சரியப்பட வைக்கும் அதிசய விந்தை.
4. நெற்றி உயர்த்த வைக்கும் வெற்றிப்பேதை.
5. ஆயிரம் சொந்தம் தந்த ஆலமரம்.
6. செல்வத்தை அடைந்த சீமாட்டி.
7. ராமனை மணந்த சீதாதேவி.
8 பெண்களை பெற்ற பாக்கியசாலி.
9. மூச்சு கொடுத்த மூன்றெழுத்து மந்திரம்.
10. முத்தம் சொன்ன முதல் உறவு.
11. நித்தம் தோன்றும் என் நினைவு.
12. சத்தமில்லா புது கனவு.
13.பிள்ளைகளை செதுக்கிய அற்புத உளி.
14.பேரன் பேத்திகளின் பாதுகாப்பு பெட்டகம்.
15. மொழி சொல்லிய வழித்தடம்.
16. விழி மொழி அறியும் தனி கவிதை.
17. சோகம் துடைக்கும் ஆறாம் விரல்.
18.என் அழுகையின் அர்த்தம் புரிந்த அகராதி.
19. வாழ்க்கைப் பாடம் சொன்ன விடிவெள்ளி.
20.என்னை அரவணைத்த தொட்டில் சேலை.
21. என் வார்த்தைகளின் முதல் எழுத்து.
22. நான் பேசிய முதல் மொழி.
23. முதல் உறக்கத்தின் தொட்டில் வாசம்.
24. என்னைத் தீண்டிய முதல் ஸ்பரிசம்.
25.நான் தேடிச்செல்லும் நிம்மதி.
26. தேடக்கிடைக்கும் வெகுமதி.
27.தந்தை நேசித்த காதல்ஓவியம்.
28.அவர் கட்டிய வசந்த மாளிகை.
29. காணக்கிடைக்காத அதிசயம்.
30.சேவை செய்யும் தேவதை.
31. முன் வைத்த காலை பின் வைக்கா போராளி.
32.வழி சொல்லும் புது விதி.
33. வெறுமை இல்லா முழுநிலவு .
34. திணறவைக்கும் திறமைசாலி.
35. அசரவைக்கும் அசட்டு தைரியம்.
36. மிரளவைக்கும் மேலாண்மை.
37. ஒப்பிட முடியா இலக்கியம்.
38. பிரம்மிக்க வைக்கும் பெண் பிரளயம்.
39. எண்ணிடமுடியா நட்சத்திரம்.
40. பத்தாம் பிறப்பாம் பாக்கியசாலி.
41. அனுபவம் பேசும் நூலகம்.
42. தனித்தே உழைத்த தவப்புதல்வி.
43. தானத்தில் பெயரெடுத்த தர்ம பத்தினி.
44. கோண வகிடு எடுத்த ராஜகோபுரம்.
45. ஆடையில் நேர்த்தி காட்டும் ஆடை அழகி.
46. காக்க வேண்டிய அற்புதம்.
47. மனதை படிக்கும் மந்திரம்.
48. நியாயம் கேட்கும் நிதர்சனம்.
49. நீங்கா உழைப்பின் உன்னதம்.
50. ஆசிரியர்களுக்குள் தனித்துவம்.. 51. யாரும் புரிந்திராத கடின புதிர்.
52. ஒளி ஏற்றிய அகல் விளக்கு.
53. துணிவாய் பேசும் ஜான்சிராணி.
54. இல்லத்தை அழகாக்கும் இல்லற ஜோதி.
55. சமையல் கலையின் சாகச ராணி.
56. ஆற்றல் அனைத்திற்கும் ஆதாரம்.
57. தலைமுறையின் ஆணிவேர்.
58. யாருக்கும் கிடைக்காத அதிர்ஷ்டம்.
59. எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம்.
60 வயதில் நிற்கும் இளம் குமரி.
உதயம் தந்தவளுக்கு
இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இப்படிக்கு
பிரியமுடன் பிரியா….