அவளை தூரமாய் பார்த்தேன் கண்விழிகள் என்னைவிட்டு பத்தடி தூரம்...
அவளை தூரமாய் பார்த்தேன்
கண்விழிகள் என்னைவிட்டு
பத்தடி தூரம் முன்னாள் சென்றது !!!
அவள் அழகை இதுவரை அளந்ததில்லை
நெருப்பின் வெட்க்கையை அருகில் உணர்ந்தேன் !!!
கோவிலில் எங்கும் கொட்டு ,மணி சப்தம்
அவள் கண் அசைவில் - எனக்கு
ஏதோ சப்தம் கேட்க்கிறது !!!
அவள் கட்டிய சேலை நீலநிறம்
பகல் வானில் கண்ணுக்கு தெரியாத
விண்மீனாய் ஒளிந்து பார்த்தேன் !!!
அவள் நடந்து போகையில்
கால்கள் பின்வாங்கியது
இருந்தாலும் கால்கள் முன்வாங்கி
அவளை காணாதது போல்
நடந்து சென்றது !!!
கால் தடங்கள் ஏனோ - அவளை
முன்னும் பின்னும் சூழ்ந்தது !!!
அவள் உலக அழகி இல்லை
நான் தினமும் தேடுபவள் !!!
ஆசிரியர்களை தேடி
கவிதை பழக வேண்டாம் !
நான் அவளை தேடியே
கவிதை பழகிவிட்டேன் !!!
காதலிப்பவர்கள் கண்மூடாமல்
கடவுளை வணங்குங்கள்
கண்மூடினால் குறைசொல்ல மறந்து
கண்திறக்கும் நேரம்வரை
என்ன குறை என்று மறந்து போவீர்கள் !!!
கண்மூடி வணங்கினால்
கடவுளே நேரினில் வந்தாலும்
அவளுக்கு பின் நிற்க்க வேண்டியதிருக்கும் !!!
கூட்டத்தில் அவளை - என் கண்கள்
இடதுபுறம் இருந்து வலதுபுறம் வரை
உலாவதற்க்குள் கண்டு பிடித்து விட்டேன் !
காணாமல் போன விமானத்தை தேட
அவளை கடலுக்குள் ஒளித்து வையுங்கள் !!!