எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எது கவிதை உள்ளத்து உணர்வே கவிதை வார்த்தை தொடர்ச்சியே...

எது கவிதை
உள்ளத்து உணர்வே  கவிதை 
வார்த்தை  தொடர்ச்சியே எழுச்சியே  கவிதை
சிந்தை நுழைந்து 
வந்துவிழும் சொல்லே கவிதை 
வாழ்க்கை தத்துவத்தை 
இயற்கை வனப்பை காதல் உணர்வை 
காதில் உரைப்பது  கவிதை
இளமை அழகை 
முதுமை  உயர்வை 
அழுகை சிரிப்பை  
கவலை   அவலம் 
எல்லாம் கலந்து உரைப்பது கவிதை
எண்ணம் கரைவது கவிதை 
வண்ணம்  குழைப்பது கவிதை
விதையில் உறங்கும் விருட்சம் கவிதை
வார்த்தை உடைத்து 
சலசலத்து ஓடும் நீரில்  வீழ்ச்சி கொள்வது கவிதை 
எவரையும் உறங்க விடாது 
கிறங்க வைக்கும் ஒற்றை வார்த்தையும் கவிதை
வார்த்தைகளின்றி அசைவது கவிதை 
இன்பம் தந்தாய் தனிமையும்கவிதை
மொழியில்  விழியில் வழியும்  உணர்வே கவிதை
எழுத்தும் கவிதை 
எழுத்தை கோர்த்து 
நிமிர்ந்து படிப்பதும் கவிதை 
அடித்தும் இடித்தும்  சொல்வது கவிதை
அசையும் சீரும் கவிதையில் சீறும்
கேட்கவே ஆசை  ஊரும்
தூக்கம் விரட்டி 
ஏக்கம்  விளைவிக்கும் கவிதை
வார்த்தைகள் இன்றி அசைவதும் கவிதை
உஷ் என்பதும் கவிதை 
மௌனமாக இருங்கள் 
ஓ ..இதுவும் கவிதை 

பதிவு : rajkavi
நாள் : 29-Dec-19, 2:28 pm

மேலே