தமிழ்நாட்டில் ஒரு எழுத்தாளன் “ பிரபல “ என்கிற...
தமிழ்நாட்டில் ஒரு எழுத்தாளன் “ பிரபல “ என்கிற முன்னொட்டுக்கு ஆசைப்படுவதைக் காட்டிலும், தானொரு கலைஞன் என்னும் கர்வத்தை நெஞ்சத்துள் ஊன்றிக் கொள்வதே உத்தமம். அதுவே சாஸ்வதமானது. அதுவே அவனுக்கும் அவன் எழுத்துக்கும் வலு சேர்க்கக் கூடியது.
இங்கு “ பிரபல நடிகர்” என்பதற்கும் “ பிரபல எழுத்தாளர்” என்பதற்குமான இடைவெளியை எண்ணிப்பார்த்தால்… அதையெல்லாம் எண்ணியே பார்க்கக் கூடாது.