இணைய அறிமுகம் :----------. சும்மா தமிழ் இணையத்தில் ஒரு...
இணைய அறிமுகம் :----------. சும்மா தமிழ் இணையத்தில் ஒரு சுற்று வாருங்கள். ஒருநாளில் சராசரியாக வாசிப்புக்கு, அறிவார்ந்த செயல்பாடுகளுக்கு, சீரிய இலக்கியத்திற்கு எதிரான நையாண்டிகள், எதிர்ப்புகள் எவ்வளவு பதிவாகின்றன என்று பாருங்கள். திகைப்பீர்கள். இங்கே ஐம்பதுலட்சத்திற்குமேல் முகநூல் கணக்குகள் உள்ளன. ஏதேனும் ஒரு வகையில், மிகமிகமிகக் குறைந்த அளவிலேனும், அறிவார்ந்த செயல்பாடுகளை ஒட்டியோ ஏதேனும் வாசிப்பைப் பற்றியோ எழுதப்படும் முகநூல்கணக்குகள் எப்படிப்போனாலும் ஐநூறுக்குள்தான் இருக்கும் என்கிறார்கள். அந்த ஐநூறு கணக்குகள்மேல் மற்றவர்களின் தாக்குதலைத்தான் சுட்டிக்காட்டுகிறேன்.